(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1253 – 1269 இன் தொடர்ச்சி)
1270. பிறழ்வு உளவியல்   Abnormal Psychology– பிறழ்நிலை உளவியல், பிறழ்வு உளவியல், அசாதாரண உளவியல் எனப்படுகின்றது. இவற்றுள் சுருக்கமான தமிழ்ச்சொல்லான பிறழ்வு உளவியல் ஏற்கப் பெற்றுள்ளது.Abnormal psychology
1271. புகைக்கொடி யியல்Cometology
1272. புண்ணியல் Helco என்பது கிரேக்க மொழியில் புண் எனப்படும்.Helcology
1273. புதிய பொருளியல்New economics
1274. புதிரியல் enigma என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் புதிர். Metagrobo என்பது புதிர் என்னும் பொருள் கொண்ட பிரெஞ்சுச் சொல்லில் இருந்து உருவானது.Enigmatology / Metagrobology
1275. புது விரிவு அண்டவியல்   New Inflationary Cosmology என்பது புது அண்டவிரிவு இயல் என்றும் புது உப்பல் அண்டவியல் என்றும் கூறப்படுகிறது. உலகத்தைக் குறிக்கும் இலத்தீன், கிரேக்கச்சொற்களில் இருந்து உருவானதுதான் Cosmology. அண்டத்தைக் குறிக்கும் இயல் அண்டவியல் என்கிறோம். Inflation என்பது பொருளியலில் பண வீக்கத்தைக் குறிக்கும். பொதுவாக உப்பல், விரிவு எனப் பொருள்கள். எனவே, இரு பொருளும் சரிதான். எனினும் உப்பல் அண்டம் எனச் சொல்வதைவிட அண்டவிரிவு என்பது எளிமையாக உள்ளது. மேலும் எழுத்தெண்ணிக்கையும் குறைவு. எனவே New Inflationary Cosmology புது அண்டவிரிவு இயல் எனப் பயன்படுத்தலாம்.New inflationary cosmology
1276. புதுச் செம் பொருளியல்Neoclassical Economics
1277. புதுச் சொல்லியல்    Neology
1278. புதுநெகிழி யியல்Chronooncology(1)
1279. புதைபடிவ யியல் Ichnology / Fossilology / Oryctology
1280. புதைபடிவப் பயிரியல்Phytolithology
1281. புத்த இயல்Buddhology
1282. புத்திய உயிரிய நுட்பியல்Modern biotechnology
1283. புத்திய நுட்பியல்Modern technology
1284. புத்திய மரபுப் பேற்றியல் கிரெகோர் மெண்டல்(Gregor Mendel) என்னும் அறிவியலறிஞர் 1865 இலும் 1866இலிலும் மரபுப்பேற்றியலைக் கண்டு பிடித்தார். இவர் பெயரால் இதனை மெண்டலின் விதிகள் என்றனர். இதனை 1900 இல் வில்லியம் படெசன்(William Bateson) என்னும் அறிஞர் மறு ஆக்கம் செய்தார். இதனையே புது மெண்டலின் விதிகள் என்கின்றனர். இவ்வாறே நாமும் முதலில் குறிப்பிட்டிருந்தோம். எனினும் விதிகளின் பொருண்மை அடிப்படையில் முறையே மரபுப் பேற்றியல் என்றும்  புத்திய  மரபுப் பேற்றியல் என்றும் குறிப்பிடலாம். அவ்வாறே இங்கே  புத்திய மரபுப்பேற்றியல் என்கிறோம்   000 ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1285 – 1300:  இலக்குவனார் திருவள்ளுவன்   (ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1270 – 1284 இன் தொடர்ச்சி)NeoMendelian Genetics

(தொடரும்

இலக்குவனார்திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000