(சட்டச் சொற்கள் விளக்கம் 1041-1042: தொடர்ச்சி)

1043. Axiomஏற்புடைமை சான்று தேவையில்லாமல்  மெய்யாக அறியப்படும்  வெள்ளிடையுண்மை; பரவலாக ஏற்றுக் கொள்ளப் படுவது. ஏற்புடைமை அடிப்படை யிலேயே வாதங்கள் எழுவதால் அடிப்படைக் கோட்பாடு எனக் கொள்ளப்படுகிறது.   சட்டம் சார்ந்த வாதத்திற்கான அடிப்படைத் தளமாகவும் செயல்படுகிறது.  சான்றாக, ஒப்பந்தச் சட்டத்தில்,  ஒப்பந்தத்திற்கு இரு தரப்பின் ஒப்புமை தேவை என்பது அடிப்படைக் கோட்பாடாக பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
1044. Axiomatic    வெளிப்படையாகத் தெரிந்த மூதுரையார்ந்த தானே தெளிவான, ஐயத்திற்கு இடமில்லாத(சந்தேகமில்லாத), மறுக்க முடியாத, புரிந்து கொள்ளப்பட்ட, கொடுக்கப்பட்ட, அறிந்தேற்பு பெற்ற, உறுதியான, திருத்தத் தேவையில்லாத அடிப்படைக் கருத்தாகும். இவை சட்ட ஏரணங்களில் (legal reasoning)அடிப்படைக் கூறுகளாகச் செயற்படுகின்றன. காண்க  Axiom-ஏற்புடைமை
1045. Axionமறுக்கொணா உண்மை பெச்சி-குயின் கோட்பாடு(Roberto Peccei and Helen Quinn in 1977) என்பதன் அடிப்படைக் கூறு ஆகும். இவ்வாறு தொழில் நுட்பம் சார்ந்த விளக்கமே பெரிதாகக் கையாளப்படுகிறது. ஆனால், சட்டத்துறையில் ஒரு சான்று அல்லது வாதம் வேறு எவ்வகை ஆதாரமும் தேவையின்றி மறுக்க இயலாத மெய்மையாக உள்ளதைக் குறிக்கிறது.
1046. Ayacut         ஆயக்கட்டு “ஆயக்கட்டு” (Ayacut) என்பது,  நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ்ப் பாசன வசதி பெற உரிமையுள்ள நிலங்களைக் குறிக்கிறது. குறிப்பாக, 1908-ஆம் ஆண்டின் சென்னை பண்ணை நிலச் சட்டத்தின் பிரிவு 136அ-இல் இது வரையறுக்கப்பட்டுள்ளது; இப்பிரிவின்படி, ஒரு நீர்ப்பாசனத் திட்டத்தின் ஆயக்கட்டு என்பது, அந்தத் திட்டத்தின் கீழ்ப் பாசனம் பெறும் அனைத்து நிலங்களையும் உள்ளடக்கியதாகும்.