கடம்பமரம் : poarthiram

கடம்பறுத்தல்: அரபிக் கடலில் பல சிறு தீவுகள் உள்ளன.1 ‘இரு முந்நீர்த் துருத்தி’2 என இது பதிற்றுப்பத்தில் கூறப்பட்டுள்ளது. அங்குக் கடம்ப (கடப்ப) மரத்தைக் காவல் மரமாக உடைய அரசன் ஒருவன் இருந்தான். அவனைக் கடம்பன் என்றே குறிப்பிடலாம்.3 நெடுஞ்சேரலாதன் தன்னிடமிருந்த பெரும்படையைக் கடற்போரில் ஈடுபடுத்தினான்;4 கடம்பனைத் தாக்கினான். நெடுஞ்சேரலாதன் கடம்பனின் படையைக் கொன்று குவித்தான். குருதி ஆறு ஓடிக் கடற்கழிகளைச் செந்நிறமாக்கியது. காவல் மரம் கடம்பு அடியோடு வெட்டி வீழ்த்தப்பட்டது. அதன் அடித் துண்டால் அக்கால வழக்கப்படி நெடுஞ்சேரலாதன் தனக்குப் போர் முரசு செய்துகொண்டான்.

  கடம்பை வெட்டி வீழ்த்தும்படி நெடுஞ்சேரலாதன் ஏவினான் என்று ஒரு பாடல் கூறுகிறது.5 இவனது மகன் செங்குட்டுவன் கடம்பறுத்தவன் என்று சிறப்பித்துப் பாராட்டப்படுகிறான். எனவே, நெடுஞ்சேரலாதன் இந்தப் போரில் தானே நேரில் ஈடுபடாமல் தன் மகனை அனுப்பி வெற்றிகொண்டானோ என எண்ண வேண்டியுள்ளது.

  1. பதிற்றுப்பத்து 11 : 12 – 14, 12 : 1 – 3, 17 : 4 – 5, 20 : 2 – 4
  2. பதிற்றுப்பத்து 20 : 2
  3. ஒப்புநோக்கு: வேம்பு – வேம்பன், முருகனைக் கடம்பன் என்று அழைப்பது வழக்கம். இவன் அந்தக் கடவுள் முருகன் அல்லன்.
  4. அகநானூறு 347 : 3 – 4 5. பதிற்பதிற்றுப்பத்து 11 : 12

மயிலை சீனி வேங்கடசாமி :mayilaiseenivenkadasamy அட்டை-தமிழகவரலாறு, சேர சோழ பாண்டியர் : attai_pandaithamizhagavaralaaru_chera,chozha,paandiyar

– தமிழ் வரலாற்று அறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி:

 பண்டைத் தமிழக வரலாறு சேரர், சோழர், பாண்டியர்

தரவு : இ.பு.ஞானப்பிரகாசன்