பாரி மகளிர் 2 – இரா.இராகவையங்கார்

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் – இரா.இராகவையங்கார். : 18 (நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 17. தொடர்ச்சி) 4. பாரி மகளிர் (தொடர்ச்சி) இதன்மேற் கபிலர், அவ்வூரை விடுத்து இளவிச்சிக்கோ என்பானிடஞ் சென்று இம்மகளிரது உயர்குடிப்பிறப்பு முதலியவற்றை எடுத்துரைத்து, இவர்களை மணஞ்செய்து கொள்ளும்படி அவனைப் பாடி வேண்ட, அவன் உடம்படாமையால் இருங்கோவேள் என்பானுழைச் சென்று அவனையும் அவ்வாறு வேண்ட, அவனும் அங்ஙனமே உடம்படானாய் மறுக்க, இதற்காக அவனை முனிந்துபாடி, பாரிகுடிக்கும் மூவேந்தர்க்கும் உண்டாகிய பகைமைபற்றி அரசரொருவரும் இவர்களை மணஞ்செய்துகொள்ள இயையாமையாற் கபிலர் அம்மகளிரைத் தமக்கினிய…

ஒளவையார்: 8 : ந. சஞ்சீவி

(ஒளவையார்: 7 : ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 17 2. ஒளவையார் (தொடர்ச்சி)   ஆனால், அந்தோ! ஒளவையாரின் கவிதையும் கண்ணீருங்கூட இனி அதிகமானை உயிர்ப்பியாவே! அதியமான் வாழ்வு அவ்வளவு கசப்பான பாடத்தைக் கடுந்துயரொடு கலந்து இவ்வுலகுக்கு உணர்த்திவிட்டது. அணுவினும் நுண்ணியதாய்-அணுவைப் பிளந்தால் தோன்றும் ஆற்றலினும் பன்னூறு மடங்கு அதிகமான பேராற்றல் படைத்ததாய் விளங்கும் இயற்கையின் ஆற்றலை-பரந்த பேரூழின் வல்லமையை-என்னென்று கூறுவது! ‘வாளெடுத்தவன் வாளால் மடிவான்,’ என்ற சான்றோரின் வாக்கு அதிகமான் வாழ்வில் எவ்வளவு துயரக் காட்சிகளோடு கலந்து மெய்யாகிவிட்டது!…

திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் : 4

(திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் : 3 தொடர்ச்சி) திருவள்ளுவர் –  4 ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றின் (126) ஒருமையு ளாமைபோ லுள்ளைந் தடக்கி (திருமந்திரம்-முதற்றந்திரம்-21) நாடொறு நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறு நாடு கெடும் (553) நாடொறு மன்னவ னாட்டிற் றவநெறி நாடொறு நாடி யவனெறி நாடானேல் நாடொறு நாடு கெடுமுட னண்ணுமால் நாடொறுஞ் செல்வ நரபதி குன்றுமே (திரு மந்திரம்-இராசதோடம்-2) சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய் ( 359) சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகின்…

“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே” (புறம்: 312) பெண்ணடிமைத்தனமா ? – தமிழரசி

“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே (புறம்: 312) பெண்ணடிமைத்தனமா ?  பொன்முடியார் எனும் சங்ககாலப்பெண்புலவர், குழந்தையைப் பெற்றேடுப்பதை விட அப்பிள்ளையைப் பாதுகாத்துப் பேணி வளர்ப்பதே தாய்மாரின் பெரும் பொறுப்பாகும். அதிலும் கன்னியரையும் காளையரையும் சமுதாய நலம் பேணுபவராய் வளர்த்து எடுத்துக் கொடுப்பது மிகமிகக் கடினமான செயலாகும். அந்தக் கடினமான செயலைச் சங்ககாலத் தாய்மார் தத்தம் பண்புகளுக்கு ஏற்ப மிக நன்றாகவே செய்திருக்கிறார்கள் என்பதைச் சங்கப்பாடல்கள் காட்டுகின்றன.   சங்ககாலத் தாய்மார் அப்படி வளர்த்திராவிட்டால் சங்கப்பாடல்களையும், சங்க இலக்கியங்களையும், சங்கச்சான்றோர்களயும் நாம் கண்டிருக்க முடியுமா? “ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே சான்றோன் ஆக்குதல்…

இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 11- 30 – இலக்குவனார் திருவள்ளுவன்

(இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 01- 10 தொடர்ச்சி) இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 11- 30   இலங்கு நீர் காவிரி இழி புனல் வரித்த: தாயங்கண்ணனார், அகநானூறு, 213.22 (சிறந்து விளங்கும் காவிரி நீர் வரிவரியாகச் செய்திட்ட(கருமணல்)) தாழ் இரும் கதுப்பின் காவிரி வவ்வலின்: பரணர், அகநானூறு, 222.8 (தாழ்ந்த கூந்தலையுடைய காவிரிப்பெண் கவர்ந்துகொண்டதால்) விடியல் வந்த பெரு நீர் காவிரி: பரணர், அகநானூறு, 226.10 ( விடியற்காலையில் புதுவெள்ளம் பெருக வந்த காவிரி) கழை அளந்து அறியா காவிரி படப்பை:…

நெடுஞ்சேரலாதனின் போர்முறை – மயிலை சீனி.வேங்கடசாமி

நெடுஞ்சேரலாதனின் போர்முறை   ‘கூற்று வெகுண்டுவரினும் மாறாதவன்’1 என்றும், ‘பகைவர் உள்ளத்தை வருத்தும் போர்ச் செயல்களைச் செய்பவன்’2 என்றும் வரும் செய்திகளால் இவனது போராற்றலை நன்கு உணர்கின்றோம்.   இவனும், இவனது படைவீரர்களும் எழுமரம் போன்ற உறுதியான நெஞ்செலும்பை உடையவர்கள்;3 முறுக்கான உடற்கட்டு உடையவர்கள்;4 இவனது படை வரிசை வரிசையாக வந்தது.5 நெடுஞ் சேரலாதன் தன் மார்பில் பச்சைநிறக் கற்கள் பதித்த அணிகலன்களை அணிந்திருந்தான்.6 நெடுஞ்சேரலாதன் யானை மீதேறிப் போர்க்களம் சென்றான்.7 அப்போது அவன் படைப் பிரிவுகளின் கண்களாக விளங்கினான்.8 படைகளைத் தழுவிச் செல்லும்…

கடம்பறுத்தல்: மயிலை சீனி.வேங்கடசாமி

கடம்பறுத்தல்: அரபிக் கடலில் பல சிறு தீவுகள் உள்ளன.1 ‘இரு முந்நீர்த் துருத்தி’2 என இது பதிற்றுப்பத்தில் கூறப்பட்டுள்ளது. அங்குக் கடம்ப (கடப்ப) மரத்தைக் காவல் மரமாக உடைய அரசன் ஒருவன் இருந்தான். அவனைக் கடம்பன் என்றே குறிப்பிடலாம்.3 நெடுஞ்சேரலாதன் தன்னிடமிருந்த பெரும்படையைக் கடற்போரில் ஈடுபடுத்தினான்;4 கடம்பனைத் தாக்கினான். நெடுஞ்சேரலாதன் கடம்பனின் படையைக் கொன்று குவித்தான். குருதி ஆறு ஓடிக் கடற்கழிகளைச் செந்நிறமாக்கியது. காவல் மரம் கடம்பு அடியோடு வெட்டி வீழ்த்தப்பட்டது. அதன் அடித் துண்டால் அக்கால வழக்கப்படி நெடுஞ்சேரலாதன் தனக்குப் போர் முரசு…

சங்கக்காலத்தில் சேரலாதன் என்னும் பெயர் கொண்ட அரசர் நால்வர் – மயிலை சீனி.வேங்கடசாமி

 சங்கக்காலத்தில் சேரலாதன் என்னும் பெயர் கொண்ட அரசர் நால்வர் இருந்தனர். நெடுஞ்சேரலாதன் இரண்டு பேர். இவர்கள் இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன், முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன் என்போர் ஆவர். பெருஞ்சேரலாதன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆகியோர் மற்ற இருவர். இவர்களுள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் வரலாற்றைச் சேர அரசர்கள் எனும் இப் பகுதியின் கீழும், முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதனின் வரலாற்றைச் சேர அரசப் புலவர்கள் எனும் தலைப்பின் கீழும் காணலாம்.   நெடுஞ்சேரலாதன் சோழன் வேல்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியோடு போரிட்டு மாண்டான். பெருஞ்சேரலாதன் கரிகாற் பெரு வளத்தானோடு போரிட்டு…