உயிர் பிரியும் தறுவாயிலும் கொடை வழங்கிய நெடுஞ்சேரலாதன் – மயிலை சீனி வேங்கடசாமி

உயிர் பிரியும் தறுவாயிலும் கொடை வழங்கிய வள்ளல்  சேரவேந்தர் நெடுஞ்சேரலாதன்   நெடுஞ்சேரலாதன் சேரநாட்டில் இருந்துகொண்டு ஆட்சி புரிந்து வருகையில் கொங்குநாட்டுக் கருவூரைத் தலைநகராகக் கொண்டு அந்துவஞ்சேரல் இரும்பொறை ஆட்சி செலுத்தி வந்தான். இவர்கள் காலத்தில் சோழநாட்டை ஆண்டு வந்த வேந்தன் வேல்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி என்றும் பெரு விறற்கிள்ளி என்றும் அழைக்கப்பட்டான்.   நெடுஞ்சேரலாதனுக்கும் இந்தச் சோழ அரசனுக்கும் போர் மூண்டது. அந்தப் போரானது ‘போர்’1 என்னுமிடத்தில் நடைபெற்றது. சோழன் அவனைப் ‘போர்’ என்ற நகரத்திற்கு வெளியே எதிர்த்துப் போராடினான். போரில் இருதிறத்துப் படைகளும்…

நெடுஞ்சேரலாதனின் போர்முறை – மயிலை சீனி.வேங்கடசாமி

நெடுஞ்சேரலாதனின் போர்முறை   ‘கூற்று வெகுண்டுவரினும் மாறாதவன்’1 என்றும், ‘பகைவர் உள்ளத்தை வருத்தும் போர்ச் செயல்களைச் செய்பவன்’2 என்றும் வரும் செய்திகளால் இவனது போராற்றலை நன்கு உணர்கின்றோம்.   இவனும், இவனது படைவீரர்களும் எழுமரம் போன்ற உறுதியான நெஞ்செலும்பை உடையவர்கள்;3 முறுக்கான உடற்கட்டு உடையவர்கள்;4 இவனது படை வரிசை வரிசையாக வந்தது.5 நெடுஞ் சேரலாதன் தன் மார்பில் பச்சைநிறக் கற்கள் பதித்த அணிகலன்களை அணிந்திருந்தான்.6 நெடுஞ்சேரலாதன் யானை மீதேறிப் போர்க்களம் சென்றான்.7 அப்போது அவன் படைப் பிரிவுகளின் கண்களாக விளங்கினான்.8 படைகளைத் தழுவிச் செல்லும்…

கடம்பறுத்தல்: மயிலை சீனி.வேங்கடசாமி

கடம்பறுத்தல்: அரபிக் கடலில் பல சிறு தீவுகள் உள்ளன.1 ‘இரு முந்நீர்த் துருத்தி’2 என இது பதிற்றுப்பத்தில் கூறப்பட்டுள்ளது. அங்குக் கடம்ப (கடப்ப) மரத்தைக் காவல் மரமாக உடைய அரசன் ஒருவன் இருந்தான். அவனைக் கடம்பன் என்றே குறிப்பிடலாம்.3 நெடுஞ்சேரலாதன் தன்னிடமிருந்த பெரும்படையைக் கடற்போரில் ஈடுபடுத்தினான்;4 கடம்பனைத் தாக்கினான். நெடுஞ்சேரலாதன் கடம்பனின் படையைக் கொன்று குவித்தான். குருதி ஆறு ஓடிக் கடற்கழிகளைச் செந்நிறமாக்கியது. காவல் மரம் கடம்பு அடியோடு வெட்டி வீழ்த்தப்பட்டது. அதன் அடித் துண்டால் அக்கால வழக்கப்படி நெடுஞ்சேரலாதன் தனக்குப் போர் முரசு…

மாமூலனார் பாடல்கள் – 22 : சி.இலக்குவனார்

  (வைகாசி 25, 2045 / 08 சூன் 2014 இதழின் தொடர்ச்சி) உஉ. “செய்வினை அவர்க்கே வாய்க்க” (தலைவனைப் பிரிந்த தலைவியும் தோழியும்) – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தோழி: அம்ம! உன்னுடைய அழகு முழுவதும் இன்று எங்கு மறைந்தது? உன்மேனி பசலை (தேமல்) படர்கின்றதே. எல்லாம் அவர் பிரிவினால் அல்லவா? தலைவி: ஆம் தோழி. என் செய்வது? தெருவில் உள்ளோரும், ஊரில் உள்ளோரும் பேசும் பேச்செல்லாம் நம்மைப்பற்றிதான். அவர்கள் உரையாடல்கள் சேரலாதன் முரசுபோல் முழங்குகின்றன. தோழி: கடல்நடுவே…