அரசியல் ஆத்திசூடி – இராமசெயம்
அனைத்திலும் அரசியல் அறிந்திடு
ஆதிக்க உணர்வை வெறுத்திடு
இல்லாதோர்க்காய் உழைத்திடு
ஈகைக் குணத்தை வளர்த்திடு
உண்மை உழைப்பைப் போற்றிடு
ஊழல் சூழல் போக்கிடு
எளிமை நெறியைக் கற்றிடு
ஏளனம் செய்தல் மறந்திடு
ஐக்கிய மாதல் உரைத்திடு
ஒற்றுமை எண்ணம் பெருக்கிடு
ஓய்தல் நீக்கிச் செயல்படு
ஓளடதம் நீயென எண்ணிடு
அஃதே அரசியலென மாற்றிடு.
– க.இராமசெயம்
http://www.rmsudarkodi.blogspot.in/
உங்கள் தளம் சிறப்பாக உள்ளது. நான் இவற்றில் சிலவற்றை மேற்கோளாக என் தளத்தில் குறிப்பிட்டுப்பயன்படுத்தலாம் அல்லவா? தங்கள் தளத்தின் பெயரைக் குறிப்பிட்டும் இணைப்பை அளித்தும் நான் தருவது என் தளப்பயன்பாட்டாளர்களுக்குப்பெரிதும் உதவியாக இருக்கும். என் வலைத்தளமும் உங்கள் வளைத்தளத்தைப் போன்று சிறப்பானதுதான். நீங்கள் இங்கே வழங்கும் பேரளவிலான தகவல்களால் என் தளப் பயன்பாடடாளர்களும் உறுதியாகப் பயனுறுவர்.
அருள்கூர்ந்து உங்கள் இசைவைத் தெரிவியுங்கள்.
மருத்துவர் அவர்களே! மிக்க மகிழ்ச்சி. நீங்கள் அகரமுதல இணையத்தளத்தின் பெயரைக் குறிப்பிட்டு, உரிய இணைப்பு முகவரியையும் அளித்து இவ்விணைய இதழில் வெளிவரும் படைப்புகளைப் பகிர்வதற்கு மகிழ்வுடன் உடன்படுகிறோம்.
நன்றி.
ஆசிரியர், அகரமுதல இணைய இதழ்