அறிவியல் வாசலில் தமிழ் – கு. செ. சிவபாலன்
அறிவியல் வாசலில் தமிழ்
முக நூலில்
முகமறியா ஒருவன் கேட்டான்
என்ன உண்டு தமிழில் – சொன்னேன்
தமிழ் . . .
அணுவைத் துளைத்தலை
அன்றே சொன்ன அவ்வை மொழி.
உலகம் இயங்க உரக்க முழங்கிய
வள்ளுவன் வாய் மொழி.
உடற் பிணி குறைய , மனக்குறை மறைய
சமூகம் பற்றி , சரித்திரம் பற்றி
சொல்லாத பொருள் உண்டோ தமிழில் ?
வளம் உண்டு.
நயம் உண்டு – என்றாலும்
அறிவியல் தேடலில் , தேவையில்
தேயுமோ தமிழ் மொழி ? – ஒரு குரல்.
ஆங்கிலமும் அஞ்சிட – இணையத்தில்
அச்சாரம் இட்டது தமிழ் மொழி.
பயன்பாடு குறைந்தாலும்
பல மொழி கலந்தாலும்
பயம் வேண்டா தம்பி !
தமிழில் படி – முதலில் தமிழைப் படி !!
கலைச் சொற்களை உருவாக்கு.
தமிழினை வளமாக்கு.
நாளும் ஒரு புத்தகம் படி – மொழி
புத்தாக்கத்திற்கு அதுவே முதற்படி.
உணர்வுகள் உரமானால்
கனவுகள் கை கூடும்.
விழுதுகள் வேர் பிடித்தால் . .
தமிழ் வழி கற்றால் . .
தமிழ் உணர்வு பெற்றால். .
அறிவியல் வாசலில்
அரியாசனம் இட்டு
அமரும் எம் தமிழ் மொழி – இது உறுதி !
— கு. செ. சிவபாலன்
ஆராய்ச்சி வளமையர் -வேளாண்மை
வேளாண் கல்லுரி, திருச்சிராப்பள்ளி.
Leave a Reply