தலைப்பு-அண்டப்புளுகர்கள்,ஏகாந்தன் :thalaippu_andapulukaragal_eakanthan

ஆள்வதற்கு அருகதை ஏதுமில்லா அண்டப்புளுகர்கள் – ஏகாந்தன்

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை

அழகாக முகம் காட்டவே

ஆடிக்கொண்டு வருகிறாய்

உன் வருகையினாலே

உவகை மிகக்கொண்டு

அப்பாவி மக்கள் வாய்பார்த்து நிற்க

அசராது பேசி மகிழ்வார்

ஆயிரம் ஆயிரம் வாக்குறுதிகளை

அள்ளி வீசி அசத்திடுவார்

ஈவுஇரக்கம் எள்ளளவுமின்றி

ஏய்த்துப் பிழைப்பார்

எத்தியே மகிழ்ந்திடுவார்

ஏதுமறியா ஏழைகளை

ஆள்வதற்கு அருகதை ஏதுமில்லா

அண்டப்புளுகர்கள்

அயோக்கிய சிகாமணிகள்!

 – ஏகாந்தன், புது தில்லி

கவிதைமணி,  தினமணி 17.11.2015

முத்திரை, கவிதைமணி : muthirai_kavithaimani_logo