தலைப்பு-இதழ்களின் மேல் கருவண்டு, அபிநயா ; thalaippu_ithazhkalinmel_karuvandu

இதழ்களின் மேல் கருவண்டு

வீட்டினுள் விழுந்தன
வளர்பிறை வெண்மதிகள்
வெட்டிய நகங்கள்’.

பூச்சிக்கொல்லி மருந்தையும்
குடிப்போம்
அயல்நாட்டுப்பானம்!

கோயிலுக்குக் குந்தகமென்றால்
கருவறையும் அகற்றலாம்
கருப்பை!

இறைவனும் இறைவியும்
இணக்கத்துடன் இணைந்தார்கள்
அரவாணிகள்!

நாத்திகனுக்குக்
கோவிலிலென்ன வேலை?
அன்னதானம்!

இதழ்களின் மேல்
கருவண்டு
மச்சம்!

அறைந்தாள்
முத்தம் கொடுத்தான்
அப்பா!

இயற்கையும்
உறைகூழ் கொடுத்தது
நுங்கு!

கூட்டமாய் வந்து
உள்ளாடை திருடினார்கள்
மணல் கொள்ளை!

அபிநயா, துபாய்.

தரவு : முதுவை இதயத்து