இந்தியும் சமக்கிருதமும் எங்கும் வேண்டா! – ஆற்காடு க. குமரன்
இந்தியும் சமக்கிருதமும் எங்கும் வேண்டா!
நடுவண் அரசின் நையாண்டித்தனம்
மாநில அரசின் மெத்தனம்
மக்கள் என்ன மத்தளமா
ஆட்சி என்ன அடிமைக் கொத்தளமா?
தாய்மொழி தாய்மையின் மொழி
வாய்மொழி வாய்மையின் மொழி
மற்ற மொழிகள் மத்தியின் சதி
வக்கற்று வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு
. . . திணிப்பவரை
வந்த திசையில் விரட்டும்
உன் தாய் தந்தையரைத் தான் முதியோர் இல்லத்தில் விட்டு விட்டாய்
உன் தாய்மொழியை யாவது உன்னோடு வைத்துக் கொள்
ஊர் மேல் விடாதே உன்னைப் பெற்ற தாய் அவள் உன் மொழி….
தேர் இல்லை நாங்கள் சுமக்க
என் தாயை மட்டுமல்ல
தாய் மொழியையும் எவர் மீதும் திணிப்பதில்லை நான்
அதற்குச் சொந்தக்காரன் நான் மட்டுமே
பாப்பானின் மொழி பகவானுக்கே புரியவில்லை
பாவம் அவன் கல்லாகிப் பல காலம் ஆனது
இறையன்பனுக்கும் புரியவில்லை இறைவனுக்கும் புரியவில்லை
அவன் முனகுகிறானா மொழிகிறானா
மொழியின் ஓசை கூட மணி
ஓசையிலே மறைந்து போகிறது
வட நாட்டுக்காரி வயிற்றில் தமிழனின் மகவு வளர்ந்தாலும்
தமிழின் வலிமை குறைவதில்லை
தாங்குவது மண்ணாகினும்
தழைப்பது என்னவோ விதைத்தவன் விதையே
பதவியில் இருப்பவன் வேண்டுமானால் பணிந்து போகலாம்
உதவி என்று கையேந்துபவன் உனக்கு கைக்கூலியாகலாம்
எதற்கும் தலைவணங்காத தமிழன் நான்
தாய் மொழி தமிழாய் இருப்பதால் தமிழன் என்ற திமிரோடு
திசையெங்கிலும் தீயாய், திணிப்போரை எரிக்க…..
இந்தியும் சமக்கிருதமும் இங்கு வேண்டா
என் தமிழ் மொழி எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு
இந்தியும் சமக்கிருதமும் எங்கும் வேண்டா!
மந்தியல்ல நாங்கள்
மத்தியிலாளும் உனக்காக
மதி மாற மனம் மாற
இவண் ஆற்காடு க குமரன், 9789814114
Leave a Reply