கிறித்துநாள் வாழ்த்து

 

என் பாவங்களைச் சுமப்பது நீரே உண்மையானால்

என் பாவங்களால் பாதிக்கப்பட்டவரைச் சுமப்பது யார்?

 

பாவங்களைச் சுமப்பது மேன்மையா

பாதிக்கப்பட்டவனைக் காப்பது மேன்மையா?

 

குற்றங்கள் மன்னிக்கப்பட்டால்

குற்றங்கள் குறைந்திடலாகுமோ

குற்றங்களை மன்னிப்பது

குற்றங்களுக்குத் துணைபோவது அல்லவா?

 

இயேசுவின் இரத்தம் செயம்

வாசகம் வாசித்தேன்

வருத்தம் மேலிட்டது  இரத்தம் சிந்தும் 

நீங்கள் பாவம் அல்லவா?

 

உயிர்களிடத்தில் அன்பு வை

உரக்கச் சொன்ன மதம்

உயிர்ப்பலி இடுகிறது

இரத்தம் செயம் என்ற உங்கள் மதம்

உயிர்ப்பலியை மறுக்கிறது.

 

வழக்கம்போல மற்றவரைப் போல்

வாழ்த்து சொல்லிவிட்டுச்  சென்றிருக்கலாம் நான்

 

முடியவில்லை என்னால்

முன்னோர்கள் வழியில்

சிந்திக்க முடிந்த வரையில்

புதிய பார்வையில் பார்க்கிறேன்

என் பார்வையில் படுவதை

என் கருத்தில் எழுவதை எழுதுகிறேன்

 

பரமபிதா வுக்காகப் பாவங்களைச் செய்யாது இருப்போம்

பாவம் அவர் சிலுவையில் இருந்தது போதும்

சீக்கிரம் உயிர் பெறச் செய்வோம்

நம் தீய உணர்வுகளைக் கொல்வோம்

 

தொற்றுக்கிருமிகள் பாதிக்கப்பட்டபோது

நம்மைத் தொடக்கூட அஞ்சிய உறவுகளை விடத்

தொட்டுத் தூய்மைப்படுத்திய மருத்துவ மனித

இதயங்களை மேம்படுத்துவோம்

 

இயற்கை என்னவோ அடிக்கடி எல்லாரும் சமம் என்று

அடித்துச் சொல்கிறது

மனித மனம் ஒரு குரங்கு அல்லவா அதை மறந்து விடுகிறது

மனிதம் போற்றும் அனைவரும்

ஒரே மதம் என்று ஒன்று படுவோம்

வேற்றுமையை வென்று களைவோம்

 

நல் வாழ்த்துகளுடன்

நல் வார்த்தைகளுடன்

உங்கள் ஆற்காடு க. குமரன்  9789814114