57ilakku

இலக்கு  

இதயத்தின் மையப்புள்ளி

எதைநோக்கிப் பார்க்கிறதோ

அதுதான் இலக்கு!

முறையான செயல்செய்யும்

அறிவான பெருமக்கள்

தேர்ந்தெடுப்பது இலக்கு!

நடைபோடும் வாழ்க்கையிலே

நாம்விரும்பும் பயணங்கள்

அமைப்பதற்கு இலக்கு..

வெற்றிக்கும் தோல்விக்கும்

விடைசொல்லிப் பார்த்தாலே

மத்தியிலே அமர்ந்திருக்கும் இலக்கு!

திட்டங்கள் இடுவோரின்

திண்மையாவும் தீர்க்கமாய்த்

தெரிவதிந்த இலக்கு!

தட்டுத்தடுமாறிக் கால்பதித்து

நடக்கத் தொடங்கிய நாள்முதலாய்

குட்டிக்குட்டியாய் இலக்குகள்!

நமக்குள் நாமே கூர்மைகொள்ள

அமைத்திடும் இலக்குகள் ஆயுதமாகும்!

சிந்தனையொன்றிச் சிறப்பாய்ச்

செயல்பட வகுத்திடும் இலக்குகள் வழிவகுக்கும்!

வாழ்வின் பொருளை வகையாய் அறிந்தோர்

வசப்படுத்துவது இலக்கு!

வாகைசூடிட நினைப்போரெல்லாம்

வாரியணைப்பது இலக்கு!!

காவிரிமைந்தன்

துபாய் 00917 50 2519693

மின் வரி – kaviri2012@gmail.com Website: thamizhnadhi.com

kaviri-mainthan01