உன்புகழ் பதித்தேன்! -கெர்சோம்செல்லையா
அருவிக்கரை
அன்று கண்ட அருவிக்கரையே!
பஃறுளி ஆறாய்ப் பாய்ந்து வந்தாய்;
படைத்தவர் தந்த அழகில் மிதந்தாய்.
வறுமை நீக்கி வாழ்வே தந்தாய்;
வட்டாற்றில் கோதையுட் புகுந்தாய்!
சிறுவனாக உன்மேல் குதித்தேன்;
சீரிய உந்தன் அழகை மதித்தேன்.
வெறுமை இன்று வீழ்த்தாதிருக்க,
விண்ணினீவே, உன்புகழ் பதித்தேன்!
-கெர்சோம்செல்லையா
Leave a Reply