உயிரில் இரத்தம் வடியும் – – ஈரோடு இறைவன்
முள்ளி வாய்க்காலில்
வெந்து கிடக்கும்
உடல் நெருப்பில்
வேல் செய்யடா
சிங்கள நரிக்
கூட்டத்தின்
உடல் கிழித்து
தூள் செய்யடா
மே 18இல்
பாலச்சந்திரன்
ஈகம் தூக்கி
கண்ணீர் பெய்யடா
அடிபட்ட
புலி
அடி கொடுக்கும்
வரலாறு மெய்யடா
உங்கள் மரண நினைவு இருக்கும்
ஒவ்வொரு
நொடியும்
ஆனால்
மே 18 இல்
மட்டும்
உயிரில் இரத்தம்
வடியும்
நினைவே
நீங்களாய்
இருக்கும்போது
மறக்க முடியுமா?
இனியாவது
மனித இனமே
ஈழம் விடியுமா?
Leave a Reply