எல்லாளன் ஆள்வார் – தமிழ் மகிழ்நன்
சிங்களன்நீ தமிழன்நான் தீங்கெமக்குச் செய்தாய்!
சிங்களமே உன்நாடு! நாடெமெக்கு ஈழம்!
கங்குலென்றும் பகலென்றும் பாராது நின்று
காட்டினிலும் களத்தினிலும் கடுந்துன்பம் வென்று
பொங்கிவரும் காட்டாறு போல்புலிகள் வருவார்!
புத்துயிரை ஊட்டியினி புதுயீழம் பெறுவார்!
மங்கிடாத புகழுடைய தமிழீழ நாடு
மாவீரர் படைத்திடுவார் நடுங்கியினி ஓடு!
முள்ளி வாய்க்கால் போர்முனையில் முழுவெற்றி என்றே
மூர்க்கன்நீ முதிர்ச்சியின்றி முழங்குகிறா யின்று!
கள்ளரைப்போல் வல்லரசர் களமாட வென்றாய்!
கதறிநீயும் அழுதலறித் தோற்றோடி வீழ்வாய்!
வெள்ளம்போல் மாவீரர் விளைகின்ற மண்ணில்
வீணன்நீ வெகுவிரைவில் வீழ்ந்தழிவாய் எண்ணு!
துள்ளுகின்ற சிங்களனுன் துடுக்குயினி மாறும்!
சுட்டெரிக்கும் தீயிலுந்தன் தேசமுற்றும் மாயும்!
மாந்தவுரிமை மீறியெமை மாய்த்ததினைப் பார்த்த
வையமினி உனைவதைக்க வருவதை நீ பார்ப்பாய்!
கூந்தலினைப் பிடித்திழுத்துக் கொடுமை செய்த பேயே!
கூர்வேல்கள் குத்துகையில் குலுங்கிடுவாய் நீயே!
சீந்துவதற்கும் ஆளின்றிச் சிதையுமுந்தன் தேசம்!
தீவினையைச் செய்தவுந்தன் தேசமாகும் நாசம்!
ஏந்தலென எம்வேந்தன் எல்லாளன் மீள்வார்!
இனப்பகையை எரித்தபின்னே எந்நாளும் ஆள்வார்.
– திருக்குறள் பாவலன் தமிழ் மகிழ்நன்
Leave a Reply