தோழர் தியாகு எழுதுகிறார் 242 : தமிழீழம்: புதிய தலையாட்டிகள் 1/2

(தோழர் தியாகு எழுதுகிறார் 241 : மோதியும் இரணிலும் பேசியதும் பேசாததும் – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! தமிழீழம்: புதிய தலையாட்டிகள் 1 / 2 இராசீவ்-செயவர்த்தனா உடன்படிக்கையும் (1987) அமைதி காக்கும் படை என்ற பெயரில் இந்திய வல்லரசு தமிழீழத்தின் மீது நடத்திய படையெடுப்பும் இந்தியப் படை நடத்திய வன்கொடுமைகளும் தமிழர்கள் மறக்கக் கூடாத வரலாற்று உண்மைகள். ஆனால் இப்போது எழுந்துள்ள புதிய சூழலில் இந்த உண்மைகளை மறப்பதுதான் சரி என்று சிலர் கிசுகிசுக்கத் தொடங்கியுள்ளனர். இந்த உண்மைகளை மறைக்கவும் அழிக்கவும் கூட…

தோழர் தியாகு எழுதுகிறார்  59

(தோழர் தியாகு எழுதுகிறார் 58 தொடர்ச்சி) தருக்க முறையும் கொள்கை அறிவிப்பும் அன்பர் சிபி பெரியார்-பிரபாகரன் தொடர்பாக அன்பர் சத்தியசீலன் தொடங்கி வைத்த உரையாடலைத் தொடரும் வகையில் பின்னவரின் மடலிலிருந்து ஒரு சொல்லியத்தைத் திரையடி எடுத்து அனுப்பியுள்ளார். இதுதான் அது:   ___புலிகள் எவ்விடத்திலும் திராவிட இயக்கத்தைச் சாடியதாக நான் குறிப்பிடவில்லை – மாறாக அவர்களின் புகழ் பாடிக் கொண்டே அவர்கள் செய்யாத செயலை இவர்கள் ஏன் செய்ய வேண்டும்?___ “இனவாதிகள்” பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் சாடுவதாகச் சொல்லி, அதற்கான பழியைப் புலிகள் மீதும்…

திலீபன் மண்ணுக்காக இறந்தான் – மேதகு பிரபாகரன்

திலீபன் மண்ணுக்காக இறந்தான்  – உயிர்க்கொடையின்பொழுது மேதகு பிரபாகரன் விடுத்த செய்தி   “எமது விடுதலை இயக்கம் எத்தனையோ அற்புதமான  ஈகங்களைச் செய்திருக்கிறது. வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது. இவையெல்லாம் எமது ஆயுதப் போராட்ட வரலாற்றில் நாம் ஈட்டிய வீர சாதனைகள். ஆனால், எனது அன்பான தோழன் திலீபனின் ஈகமோ-தியாகமோ வித்தியாசமானது, வியக்கத்தக்கது. எமது போராட்ட வரலாற்றில் புதுமையானது. அமைதிப் போராட்டக் களத்தில் தன்னைப் பலிகொடுத்து ஈடு இணையற்ற ஈகத்தைத் திலீபன் புரிந்தான். அவனது மரணம் ஒரு வரலாற்று நிகழ்ச்சி. தமிழீழத் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிய நிகழ்ச்சி….

போற்றுதலுக்குரிய ஞாலத்தலைவர் பிரபாகரன் என்றென்றும் வாழியவே! – இலக்குவனார் திருவள்ளுவன்

போற்றுதலுக்குரிய ஞாலத்தலைவர் பிரபாகரன் என்றென்றும் வாழியவே!   தமிழ்நாடான இலங்கை, ஒற்றை நாடாகவே மலர்ந்து தமிழினமும் இனஉரிமையும்  இணைஉரிமையும்  பெற்றுத் திகழும் என்னும் கனவு சிங்களர்களால் அழிக்கப்படத் தொடங்கிய நாளிலிருந்தே தமிழர்நாடு மலர  வேண்டிய தேவையை இலங்கைத்தமிழர்கள் உணர்ந்தனர். அடக்குமுறைகளும் ஒடுக்கு முறைகளும் அவற்றிற்கு எதிரான தொடர்  போராட்டங்களும் வாழ்க்கையாய் மாறின. விடுதலை விதைகள் பலரது உள்ளங்களிலும் ஊன்றப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே “தமிழீழம் தமிழர்களின் தாயகம்“ என்னும்  மந்திர உண்மை ஈழத்தமிழர்களை வழிநடத்தியது.  மூத்ததலைவர்கள் வழியில் போராட்டக் களத்தில் ஈடுபட்டாலும் தேவை உணர்ந்து விடுதலைப்படை…

ஈழத்தமிழர் வாழ்வு குறித்து இரட்டை நிலைப்பாடு வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஈழத்தமிழர் வாழ்வு குறித்து இரட்டை நிலைப்பாடு வேண்டா!    ஒருவர் தன் கொள்கையை அல்லது கருத்தை மாற்றிக் கொண்ட பின்னர் முன்னர்  அவர் சொன்னதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கக்கூடாது. சான்றாகத் தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி இறை மறுப்பாளர் என்ற முறையில்தான் உலகறியப்பட்டவர். ஆனால், தொடக்கத்தில் அவர் சாமியாராகத் திரிந்ததை வைத்துக்கொண்டு அவரை இறைஏற்பாளர் என்ற அளவில் மதிப்பிடலாமா? கூடாதல்லவா? அதுபோல்தான் மேனாள் முதல்வர் செயலலிதா தமிழ்ஈழம் குறித்தும் விடுதலைப்புலிகள் குறித்தும் தமிழ்க்கேடர்களின் கருத்தாக்கத்தால் முதலில் தவறான நிலைப்பாடு எடுத்திருந்தார்.  சட்ட மன்றத்திலும் மேதகு பிரபாகரனைக்…

அழுகிப்போன இலங்கைக்குப் புனுகுபூசும் இராம்! – புகழேந்தி தங்கராசு

அழுகிப்போன இலங்கைக்குப் புனுகுபூசும் இராம்!/  ‘இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகப் பன்னாட்டுப் பங்களிப்புடன் கூடிய நடுநிலையான  உசாவல் நடத்தப்பட வேண்டும்’ –  என்று ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில், இலங்கை அரசின்  இசைவுடனேயே, ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு  ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இன்றுவரை, அப்படி ஓர் உசாவல் நடக்கக்கூடும் என்பதற்கான அறிகுறி கூட இல்லை.   சிங்களப் படையினரின் கொலைவெறியும் காமவெறியும் தொடர்ந்து அம்பலமாகிவந்த நிலையில்,  பன்னாட்டு அளவில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஏற்பட்ட நெருக்கடியை நீர்த்துப்போக வைப்பதற்காகவே, அந்தத் தீர்மானத்தைத்…

கல்லறைகள் கண்ணீர் விடுவதற்கல்ல ! – ஈழத்து நிலவன்

இனம் வாழ இவர் செய்தார் தியாகம்! இவர் எண்ணம் வாழ நாம் செய்வோம் யாகம்! இன்னும் எத்தனைக் காலம்தான் கண்ணீர் விடப் போகின்றீர்கள் இழந்தவற்றை எண்ணி? இன்னும் எவ்வளவு நேரம்தான் கண்ணீர் சிந்தப் போகின்றீர்கள் உங்கள் தனியரின் கல்லறையின் முன்னால் கல்லறைகள் கண்ணீர் விடுவதற்கல்ல கருத்தரிப்பதற்கே! ஓர் இருளின் உகத்தை எரிப்பதற்காகத் தான் அவன் சூரியனாகிப் போனான் போராளி நடந்த சுவடுகளைத் தொட்டுப் பாருங்கள் சுள்ளென்று சுடும் அவன் விடுதலையின் தாகங்கள் ! அவன் உயிரின் ஆன்மா எதை நினைத்து உறங்கிப் போயிருக்கும் தனது…

தமிழருக்(கு) அரணாய் நின்றான் வாழியவே!

  ஈழப் புலிமகன் வீரத் தலைமகன் எறிகணை தொடுத்தான்! ஆழிப்பேரலை போலச் சினமுடன் அடியாய் அடியடித்தான்!   அடிமை இல்லாத தமிழீழம் படைக்க நினைத்தான்! அனைவரும் சமமாய் வாழ்ந்திட ஒன்றாய் இணைத்தான்! தரைப்படை கடற்படை வான்படை கட்டி அமைத்தான்! மில்லர் தற்கொடைப் படையால் எதிரிகள் முற்றுகை தகர்த்தான்!   அறநெறியோடு போர்முறை காத்து வென்றான் – வைய அரங்கில் இவனே தமிழருக்(கு) அரணாய் நின்றான்! தமிழாய் நெருப்பாய்த் தலைவன் பிறந்தே வந்தான் – புதுத் தமிழீழ அரசு ஒன்றைப் பொதுவாய்த் தந்தான்!   அடுப்பில் கிடந்த பெண்ணைப் புலியாய்ப் படைத்தான் – பெண் அடிமை…

தன்னைத் தமிழர் வாழ்வாய் ஆக்கிய தலைவா நீ வாழ்க!

  கங்கை கடாரம் காழகம் ஈழம் கண்டு வென்றவனே! எங்கள் மண்ணில் கரிகால்வளவனாய் இன்று பிறந்தவனே! தங்கத்தமிழர் விடுதலைக்காகத் தன்னைத் தந்தவனே! சிங்களப் படையைப் பொடிப் பொடியாக்கிய செம்மலே நீ வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! – நீ வாழ்க! வாழ்க! வாழ்க!   மண்ணும் மொழியும் இனமும் காக்கும் மறவன் நீ அன்றோ! விண்ணும் மழையைத் தூவி உன்னை வாழ்த்தும் நாள் இன்றோ! எண்ணும் செயலை முடிக்கும் அறிவின் ஏற்றம் நீயன்றோ! வண்ணத் தமிழர் வாழ்வின் சுடரே! வாழ்க நீ நன்றே! (கங்கை…

பிரபாகரன், பன்னூறு ஆண்டுகள் வாழியவே! – இலக்குவனார் திருவள்ளுவன்

கார்த்திகை 11,  தி.பி. 1985 / நவம்பர் 26, கி.பி. 1954 அன்று தமிழாய்ப்பிறந்த தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன்  பிறந்த நாள் பெருமங்கலம்! தமிழ் என்றால் இனிமை. தமிழ் என்றால் அழகு. தமிழ் என்றால் வீரம். தமிழ் என்றால் அன்பு.   தமிழ்போல் இனிமையும் அழகும் வீரமும் அன்பும் கொண்டவரே தலைவர் பிரபாகரன். பிரபாகரன் பிறந்ததால்தான் உலகம்  தமிழரின் வீரத்தை உணர்ந்தது! தமிழரின் செம்மையை அறிந்தது! தமிழ்ஈழம் இன்றைக்கு உரிமை இழந்து நிற்கலாம். ஆனால், நாளை மீண்டும் எழும்! மலரும்! தனியரசாய்த்…

1 2 4