ஒலி என்பதெல்லாம் செந்தமிழ் முழக்கம்! – பாவேந்தர் பாரதிதாசன்
எந்நாள்?
அந்த வாழ்வுதான் எந்த நாள் வரும்?
அந்த வாழ்வுதான்
இந்த மாநிலம் முழுதாண் டிருந்தார்
இணையின்றி வாழ்ந்தார் தமிழ்நாட்டு வேந்தர்
அந்த வாழ்வுதான் எந்தநாள் வரும்?
ஒலி என்பதெல்லாம் செந்தமிழ் முழக்கம்;
ஒளி என்பதெல்லாம் தமிழ்க் கலைகளாம்!
புலி, வில், கயல் கொடி மூன்றினால்
புது வானமெங்கும் எழில் மேவிடும்
அந்த வாழ்வுதான் எந்தநாள் வரும்?
குறைவற்ற செல்வம், வாழ்வில் இன்பவாழ்வு
கொண்ட தமிழனுள்ளம் கண்ட தமிழிசை,
பிற மாந்தர்க்கும் உயி ரானதே
பெறலான பேறு சிறி தல்லவே!
அந்த வாழ்வுதான் எந்தநாள் வரும்?
– பாவேந்தர் பாரதிதாசன்
Leave a Reply