குழந்தை : kuzhanthai

கடவுள் மொழிபேசும் கடவுள்

என் கவனம் விழ
கிட்டே
தத்தித்தத்தி ஓடிவந்து
கடவுள் மொழியில் பேசுகிறது

வா வாவென கைகள்
நீட்டுகையில்

வெட்கப்பட்டு
கண்களையும் கன்னங்களையும்
மூடிக்கொள்கிறது
அவ்வப்போது
முன்தலையையும்
மறைத்துக்கொள்கிறது

சற்று கை நகர்த்தி
இருக்கேனா ? என்று
அடிக்கடிப் பார்த்துக்கொள்கிறது

நான் பார்க்காததுபோல்
நடிக்கும்போது
உற்றுப்பார்க்கிறது
துளிசத்தம் எழாமல்
கைகொட்டுகிறது

நான் சட்டென்று பார்க்கையில்
அம்மாவின் பின்னால்
ஓடி ஒளிந்துகொள்கிறது

நான் நகரும்போது
கண்ணில் ஏக்கம் தெறிக்க
வழியனுப்புகிறது
கையசைத்து!

கடவுள்
மொழிபேசிய
கடவுள்!!

– இரா. சத்திக்கண்ணன்

சக்திக்கண்ணன்.இரா. : sakthi-kannan-iraa.

தரவு: முதுவை இதாயத்து