கலையாத உம் புன்னகை! – ஆற்காடு.க.குமரன்
கலையாத உம் புன்னகை!
கடைசிவரை
கட்சி மாறாமல்
கறை படியாமல்
இறையாய்
இரையானீர்!
சிலையமைக்க வேண்டும்
விலைமதிப்பற்ற உம்மை
இலை போட்டுக்
கனி வைத்து
முரசு கொட்டினாலும்
முடியவில்லை
திசைமாறாத்
தீக்கதிரினை
பக்கத்திலிருந்த
மலை முகடே நின்
திசை மாறாது
திரு.க.அன்பழகன்
கழகன்
அழகன்
கதிரவன் அருகில்
கலையாத
உம் புன்னகை!
நட்புக்கு
உப்பு ………நீர்
தம்பி அழைத்தார் எனத்
தன்னிலை மறந்தாயோ
முன்னிலை அவர் என்று
முடிந்து போனாயோ!
மூத்த தலைவர்களில்
முடிசூடா மன்னன் நீர்
முடிசூட்டிக் கொள்கிறேன்
உம்மையே
முற்றிலும்
உண்மையே!
பழக்கமில்லாத நான்
பாடுகிறேன் உனக்காக எனும் போதே
பாராட்டப் படக்கூடிய
நிலையில் நீர்!
பருகித் தாகம் தணிக்கிறேன் நான்!
இவண்
ஆற்காடு.க.குமரன்
9789814114
Leave a Reply