காணாமல் போவர்!  

 

நேற்றுவரை வந்தவர்கள்

நாளை காணாமல்

போவர்

 

விரல் மை

காயும் முன்னர்

மாயமாய் மறைவர்

 

மறந்து போய்

நன்றி சொல்ல

வரலாம் சிலர்

 

தவறாமல் பலர்

தொகுதிப் பக்கம்

காணாமல் போவர்

 

நம் நாட்டுத்

தேர்தலின்

சிறப்பு இதுதான்

 

இருந்தாலும் நாம்

தவறாமல்

வாக்களிப்போம்!

 

இலக்குவனார் திருவள்ளுவன்