blacktigers01

கல்லறை தின்றதோ
எங்கள் மறவரை
களங்கள் தேடுதே
அந்த வீரரை
நிலத்தில் இடியான
எங்கள் சோதரை
கண்ணிவெடிகள்
மறக்குமா புதைத்த மாதரை

விடிவு ஒன்று தான்
எம் மண்ணின் மூச்சு
விடியும் வரையும்
இல்லை வாய்ப்பேச்சு
தமிழர் என்பதே
தலைவிதி ஆச்சு
என்று சங்கை ஊதியே
களம் சேர்ந்தாச்சு
முப்படை என்பதே
உலகின் வழக்கம்
நாற்படை கண்டது
புலிகள் இயக்கம்
பகையின் தலையில்
இடிகள் முழக்கம்
அது கரும்புலி என்றொரு
காவியச் சதுக்கம் ……..

blacktigers02

நன்றி :  http://www.lankasripoems.com/?conp=poem&poetId=196388&pidp=212278