குடும்பத்தை இணைக்கும் மகுடை! – ஆற்காடு க. குமரன்
குடும்பத்தை இணைக்கும் மகுடை!
என் குடும்பத்தோடு
என்னைக் கூட்டிக் கொடுத்தது
அன்பைக் காட்டிக்கொடுத்தது
இணையம் கூட இன்று வந்தது
இணையும் குடும்பம் என்றும் நிலைப்பது!
பணத்தைத் தேடி ஓடிக் கொண்டிருந்தோம்
பிணமாகப் போகிறோம் என்ற பயத்தில் பதுங்கிக் கிடக்கிறோம்!
வருமுன் காப்போம்
வந்த பின்னும் காப்போம்
பகிராமல்
கண்ணுக்குத் தெரியாத
நோய்மி, கடவுளையும்
கடந்து கதவடைக்காமல்
காற்றில் கட்டுப்பாடில்லாமல்
விடியலில் எழுந்து
விரைந்து கடந்து
உழைத்துக் களைத்து
உறவுகள் உறங்கிய பின்னே
உடைந்து திரும்பி
அடைந்து உறங்கி
கடந்து கொண்டிருந்த நாம்
விடியலை மறந்து
தலையணையாய்,
தம் மகவுக்குக்
கைகளையும்
பஞ்சணையாய் தம்முடலையும்
பதிக்கும்.
எத்தனைக் காலமானது
இப்படி உறங்கி
செப்படி வித்தையானது
செய்த வினை நோய்மிகள்தாமே!
தீதோ நன்றோ
தீரட்டும் பிரிவினை
பிணையட்டும்
உறவுகள்
பிணி தீரட்டும் பசலை
வீடு நலம்பெற
நாடும் நலம் பெறும்
கேடும் கலைந்திடும்
வாடும் நோய்மிகள்
ஓடும் விலகியே!
கண்ணுக்குத் தெரியாத ஒன்று கட்டுப்படுத்துகிறது
உலகத்தை
அன்பு ஒன்றாலே
அகிலம் பிறக்குது
இவண்
ஆற்காடு க. குமரன்
9789814114
Leave a Reply