தலைப்பு-குவிக்க வேண்டும் தமிழ்ச்செல்வம் :thalaippu_kuvikkavendum_thamizhchelvam_kabali

குவிக்க வேண்டும் தமிழ்ச்செல்வம்!

தமிழில் பேசு கலப்பின்றித்
தவமாய்க் கொண்டு பழகிடவே
சிமிழில் ஒளிரும் முத்தாகும்
சிந்தை மகிழும் ஒளிக்காணும்
குமிழைப் போன்ற வாழ்வினிலே
குவிக்க வேண்டும் தமிழ்ச்செல்வம்
அமிழ்தாய் மாறி உயிரினிலே
அடங்கும் பொலிவைக் காண்போமே!

தாமோதரன் கபாலி