கூரிய ஆயுதமது கைவிரல்தான்! – சச்சிதானந்தன் தெய்வசிகாமணி
கூரிய ஆயுதமது கைவிரல்தான்!
காரியம் முடிந்தவுடன் கைகழுவும் கயவர்மேல்,
காரி உமிழ்ந்தாலும் தவறில்லை உமிழுங்கள்!
சீரிய சிந்தனையில் சமநிலையைக் கொள்ளுங்கள்,
சீறிடும் கோபத்தை நெஞ்சுக்குள் வையுங்கள்,
கூரிய ஆயுதமது கைவிரல்தான் காணுங்கள்,
குறிவைத்துச் சரியாக அதைநீங்கள் பாய்ச்சுங்கள்,
வீரியம் இல்லாத விதைகளை விலக்கிவிட்டு,
வறுமையை நீக்கும்நல் விதைகளை விதையுங்கள்!
திராவிடன் தமிழனெனும் வாதத்தைக் கடந்து,
தீரமும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட நல்ல,
தூயவன் யாரென்று தெளிவாக உணருங்கள்!
தயக்கம் இல்லாமல், தாமதம் செய்யாமல்,
தமிழர்க்குத் தலைவனென அவனை ஆக்குங்கள்!
Leave a Reply