கூரிய ஆயுதமது கைவிரல்தான்! – சச்சிதானந்தன் தெய்வசிகாமணி

கூரிய ஆயுதமது கைவிரல்தான்! காரியம் முடிந்தவுடன் கைகழுவும் கயவர்மேல், காரி உமிழ்ந்தாலும் தவறில்லை உமிழுங்கள்! சீரிய சிந்தனையில் சமநிலையைக் கொள்ளுங்கள், சீறிடும் கோபத்தை நெஞ்சுக்குள் வையுங்கள், கூரிய ஆயுதமது கைவிரல்தான் காணுங்கள், குறிவைத்துச் சரியாக அதைநீங்கள் பாய்ச்சுங்கள், வீரியம் இல்லாத விதைகளை விலக்கிவிட்டு, வறுமையை நீக்கும்நல் விதைகளை விதையுங்கள்! திராவிடன் தமிழனெனும் வாதத்தைக் கடந்து, தீரமும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட நல்ல, தூயவன் யாரென்று தெளிவாக உணருங்கள்! தயக்கம் இல்லாமல், தாமதம் செய்யாமல், தமிழர்க்குத் தலைவனென அவனை ஆக்குங்கள்! சச்சிதானந்தன் தெய்வசிகாமணி

தலைவன் என்றே நினைக்காதே! – சச்சிதானந்தன் தெய்வசிகாமணி

தலைவன் என்றே நினைக்காதே! அன்னையின் கருவில் சிதைவுற்றுப் பிறந்த, பிண்டம் போலக் கிடக்காதே! உன்னையும் தெருவில் நிறுத்தும் ஒருவனை, தலைவன் என்றே நினைக்காதே! மந்தையில் நரிஎனப் புகுந்திடும் நீசர்கள், மண்டையை உடைக்கவும் தயங்காதே! சந்தையில் மறியென வாக்கிற்கு உயரிய, விலை வைப்பார்கள் வீழாதே! சந்தனம் என்றே சொல்லிச் சொல்லி, சேற்றை வாரி இறைப்பார்கள்! உன்தடம் அழித்து உரிமையைப் பறிக்க, ஊளை இடுவார் மயங்காதே! பந்தயக் குதிரையைப் போலத் தேர்தலில், பாய்ந்திடும் தலைவர்கள் எல்லாரும், உன்முதுகேறி ஓடுகிறார்! அதில், பொய்முகம் கொண்ட பேயர்களை, பின்முதுகாம் புற…

பனங்காட்டு நரிகளும் பைந்தமிழ் மான்களும் – சச்சிதானந்தன் தெய்வசிகாமணி

பனங்காட்டு நரிகளும் பைந்தமிழ் மான்களும் ஏற்றத் தாழ்வுகளே என்நாட்டின் முகவரியா? ஏக்கப் பெருமூச்சே ஏழைகளின் தலைவிதியா? ஏட்டுச் சுரைக்காய்கள் விளைகின்ற நிலமாகி, ஏய்த்துப் பிழைப்போரின் ஏகாந்தக் களமாகி, எந்தை நாடிங்கு செம்மை இழக்கிறதே! ஏர்பிடிக்கத் தயங்குமொரு ஏமாளித் தலைமுறை, எதிலுமொரு பிடிப்பின்றி வாழுகின்ற மனநிலை, என்னஇங்கு நடக்குதென்று புரியாத பாமரர்கள், எண்ணற்றுப் பெருகிநிற்கும் பரிதாபச் சூழ்நிலை! எலும்புத் துண்டுகளை நாய்களுக்கு வீசி, எறும்புக் கூட்டத்தின் உழைப்பை விலைபேசி, எச்சில் துர்நாற்றம் வீசுகின்ற தாசி, எளிதாய்ப் பொன்பொருளைச் சேர்த்திடுதல் போலே, எள்ளளவும் மானமின்றிப் பொதுச் சொத்தைத்…

தமிழகச் சட்டமன்றத் தேர்தல், மே 16, 2016 – சச்சிதானந்தன் தெய்வசிகாமணி

தமிழகச் சட்டமன்றத் தேர்தல், மே 16, 2016 நல்ல உள்ளங்கள் நலிந்து வேகுதே, நாதி இல்லாமல் தெருவில் சாகுதே, நீதி கேளிக்கைப் பொருளென்றாகுதே, நிலைமை கைமீறி நேர்மை வழிமாறி, நாளும் தீநாற்றம் அதிகமாகுதே! நெஞ்சம் வெம்மித்தமிழ் நிலத்தைக் காத்திட, நின்று நல்லுயிரைக் கொடுத்துப் போராடி, நாடு சுடுகாடு ஆகும்முன் காக்க, தமிழர் நாம் துணிந்து ஒன்று கூடுவோம்! நல்ல தமிழன் ஒருவனை ஆட்சிப் பீடத்தில், நீங்கள் ஏற்றி வைத்துப் பாருங்கள்! நீங்கும் தமிழ் மண்ணின் சாவங்கள்! நிலைத்த நல்லாட்சி பெற்று நல்லதொரு, நிலைக்கு உயரலாம்…