சாமியே வள்ளுவனே சரணம் !

வள்ளுவன் சரணம்; ஐயன் சரணம்
ஐயனே வள்ளுவனே; வள்ளுவனே நம்ஐயனே
வள்ளுவனே ஐயனே; ஐயனே வள்ளுவனே

வள்ளுவனே வருக! வாய்மை தருக!
வாய்மை தருக!  வள்ளுவனே வருக!

தாயே சரணம் தந்தையே சரணம்
தந்தையே சரணம் தாயே சரணம்
ஆதியே சரணம் பகவன் சரணம்
பகவன் சரணம் ஆதியே சரணம்
தமிழே வருக! குறளே வருக!;
குறளே வருக! தமிழே வருக!

முப்பால் சரணம்; முத்தமிழ் சரணம்;
முத்தமிழ் சரணம்; முப்பால் சரணம்;

தமிழைப்பாடு தமிழை நாடு
குறளும் யாப்பும் மொழிக்குக் காப்பு
சிலம்பும் தண்டியும் அணிக்குக்காப்பு
ஐயனே வள்ளுவனே; வள்ளுவனே ஐயனே ;
வள்ளுவனே ஐயனே; ஐயனே வள்ளுவனே;

தெள்ளுதமிழில் முப்பால் கட்டு
அள்ளும் நெஞ்சில் அறப்பால் கட்டு
கட்டு கட்டு பொருட்பால் கட்டு
கட்டு கட்டு இன்பப்பால் கட்டு
ஐயனே வள்ளுவனே; வள்ளுவனே ஐயனே;
வள்ளுவனே ஐயனே; ஐயனே வள்ளுவனே

பகுத்தறிவு விதைக்கும் ஐயனுக்கு
உதிக்கின்ற அறிவும் ஐயனுக்கு
கல்வியும் அரசும் ஐயனுக்கு
நாடும் பகையும் ஐயனுக்கு
ஐயனே வள்ளுவனே; வள்ளுவனே ஐயனே;
வள்ளுவனே ஐயனே; ஐயனே வள்ளுவனே

புலால்மறுத்துப் புறங்கூறாது
ஒப்புரவுஅறிந்து வாய்மைசெறிந்து
ஐயனே வள்ளுவனே ; வள்ளுவனே ஐயனே
வள்ளுவனே ஐயனே; ஐயனே வள்ளுவனே

அரணும் சொல்லும் உழவும் சொல்லும்
குடிமை சொல்லி கேள்வியும் நல்கும்;
வள்ளுவனே ஐயனே; ஐயனே வள்ளுவனே
வள்ளுவனே ஐயனே; ஐயனே வள்ளுவனே

இல்லறம் அன்றி நல்லறம் இல்லை
இதுவே வள்ளுவன் வாய்மொழி எல்லை
உணர்ச்சியும் வேண்டி புணர்ச்சியும் தாண்டி
புலவி நுணுக்கம் ஆண்டவன் தாண்டியும்

வள்ளுவன் பாடம் வாழ்வியல் ஆகும்
வள்ளுவன் பாடம் வான்வரை போகும்

முல்லை சரணம் மருதம் சரணம்
நெய்தல் சரணம்.. பாலை சரணம்
நால்மண்ணும் சரணம்; தொல்குடியும் சரணம்;
சரணம் சரணம் தமிழே சரணம்..
சரணம் சரணம் நிகழ்வே சரணம்..
சரணம் சரணம் ஒலிப்பாய் சரணம்..
சரணம் சரணம் மலர்வாய் சரணம்.
ஐயனே வள்ளுவனே; வள்ளுவனே ஐயனே;
வள்ளுவனே ஐயனே; ஐயனே வள்ளுவனே

இயலே சரணம் இசையே சரணம் ;
கூத்தே சரணம்; மொழியே சரணம்..
உன்னடி சரணம்; பொன் குடி சரணம்;

சரணம் சரணம் தமிழே சரணம்..
சரணம் சரணம் உயிரே சரணம்..
சரணம் சரணம் எழுவாய் சரணம்..
சரணம் சரணம் ஒளிர்வாய் சரணம்

சேரன் சோழன் திருவடி சரணம்..
பல்லவன் பாண்டியன் இருமுடி..சரணம்..
நான்முடி சரணம் தமிழ்க்குடி சரணம்..

குறளே சரணம் ; தொல்காப்பே சரணம் ..
சிலம்பும் சரணம்;.மணியும் சரணம்..
நான்கவி சரணம் ; ஆள்குடி சரணம்..

சரணம் சரணம் தமிழே சரணம்..
சரணம் சரணம் நிகழ்வே சரணம்..
சரணம் சரணம் ஒலிப்பாய் சரணம்..
சரணம் சரணம் மலர்வாய் சரணம்..

அகமே சரணம் ..புறமே சரணம்..
பத்தே சரணம்.. பதினெண் சரணம்…
நாலடி சரணம் ..தன்மானம் சரணம்..

ஐயனே வள்ளுவனே; வள்ளுவனே ஐயனே;
வள்ளுவனே ஐயனே; ஐயனே வள்ளுவனே

வில்லே சரணம்.. மீனே சரணம்..
புலியே சரணம் ..சிங்கம் சரணம்…
நான்கொடி சரணம்.. தமிழ்க்குடி சரணம்..

அழகே சரணம்…..அறிவே சரணம்..
அன்பே சரணம் ..பண்பே சரணம்…
நால்குணம் சரணம்..வேல்குடி சரணம்..

ஐயனே வள்ளுவனே; வள்ளுவனே ஐயனே;
வள்ளுவனே ஐயனே; ஐயனே வள்ளுவனே!

 

– சந்திரசேகரன் சுப்பிரமணியம்