செத்து மடிந்தது போதுமடா – உலோக நாதன்
செந்தமிழா சேர்ந்தெழடா !
உலகத் தமிழினம் உறைந்தது ஒருகணம்
ஊமை விழிகளும் உற்றங்கு பார்த்தது
புலரும் பொழுதினில் புத்தனின் தத்துவம்
போட்டது குண்டினை, புறா அங்கு வீழ்ந்தது
நித்திய புன்னகை நீள்துயில்
கொண்டதுசத்திய சோதனையா?
செத்து மடிந்தது போதுமடா
செந்தமிழா சேர்ந்தெழடா !
கத்திக்கத்தி பேசி, காலம்
கடத்தியேகல் நட்டது போதுமடா!
சொல் வட்டத்துக்குள் நின்று
குட்டக்குட்ட குனிந்தது போதுமடா!
கொத்தும் கழுகோடு
குள்ளநரிகளும்ஒத்திங்கு ஊதுதடா!
வாய் பொத்திக்கிடந்தது போதுமடா
வாள் கத்தி கொண்டு நீ எழடா
புலரும் பொழுதினில் புத்தனின் தத்துவம்
போட்டது குண்டினை புறா அங்கு வீழ்ந்தது
உணர்ந்து பாரடா தமிழ் அழிந்து போவதா?
ஒதுங்கி ஒதுங்கி போவ தேன் ஒன்று சேரடா
ஒற்றுமையாகவே ஓரணியய் நின்று
முத்தினைக் காத்திடவா! -ஈழமுத்தினைக் காத்திடவா
தாய் மண்ணை மீட்டீங்கு தன்மானமாய்
வாழத் தலைவன் கரம்பற்றடா
செத்து மடிந்தது போதுமடா
செந்தமிழா சேர்ந்தெழடா !
Leave a Reply