செந்தமிழ்த் தாயே!

எடுப்பு

எங்கள் தமிழ் மொழியே! – உயிரே!

-எங்கள்

தொடுப்பு

இங்குனை நாங்கள் இகழ்ந்தத னாலே
இழிநிலை அடைந்தோம் உரிமையும் இழந்தோம்

-எங்கள்

முடிப்பு

பூமியில் மானிடர் தோன்றிய நாளே
பூத்தனை தாமரைப் பூவினைப் போலே
பாமிகும் காவியப் பாவையே தாயே
பணிந்தோம் கடைக்கண் பார்த்தருள் வாயே.

-எங்கள்


இயலிசை கூத்தென இலங்கிடு வாயே
எமதுயிர் உணர்வுகள் யாவையும் நீயே
மயலெமை நீங்கிட மதியருள் வாயே
மைந்தரைக் காத்தருள் செந்தமிழ்த் தாயே.

-எங்கள்

கவிஞர் முடியரசன்