தலைப்பு-செந்தமிழ்நாட்டார் வாடுகின்றார் :thalaippu_chenthamizhnaattar_vaadukinraar_chellaiya

செந்தமிழ் நாட்டார் வாடுகிறார்!

 

மக்களாட்சி என்ற பெயரில்,
மானம் விற்போர் ஆடுகிறார்.
சக்கையாக ஏழையைப் பிழிந்து
சாற்றை எடுத்து ஓடுகிறார்!
செக்கு மாடாய்ச் சுற்றுகின்ற
செந்தமிழ் நாட்டார் வாடுகிறார்.
எஃகு போன்ற துணிவு இல்லை;
இதனால் அழுது பாடுகிறார்!

கெர்சோம் செல்லையா : gersomchellaiya02

-கெர்சோம் செல்லையா