சொல்லாத என் கனவு

சொல்லாத என் கனவு

பசி இல்லாத பாமரன்

யாசகம் கேட்கா யாக்கை

விற்கப்படாத கல்வி

 

சொல்லாத என் கனவு

கூட்டணி இல்லாத அரசு

ஊழல் செய்யாத அதிகாரிகள்

சாதி இல்லாத சமுதாயம்

 

பதிலுக்குச் சிரிக்காத காந்தி

பதவிக்கு ஏங்காத அரசியல்வாதி

பரிகாரம் சொல்லாத ஆன்மீகவாதி

பலியாடு ஆகாத பக்தன்

 

சிபாரிசு இல்லாத வெற்றி

சித்திரவதை படாத மரணம்

சிலந்தி பின்னாத வலை

சிந்தனை சிறந்த உள்ளம்

 

உயிர்ப் பயம் இல்லா உடல்

உறவு நலிவு இல்லாத உள்ளம்

எதிர்பார்க்காத ஆயுள்

எதையும் எதிர் கொள்ளும் உறுதி

 

சமநோக்குப் பார்வை

தொலைநோக்குப் பார்வை

ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயம்

குற்ற உணர்வு இல்லாத வாழ்வு

 

இப்படிச் சொல்லாத என் கனவுகள் ஆயிரம்…..

சொல்லிவிட்டேன்

பலிக்குமா. . . .?

சொன்னதால் என்னைப் பலியாக்குமா. . .?

இவண் ஆற்காடு க.குமரன் 9789814114