தமிழினப்   பகைவெல்ல   ஒன்றுக!

ஒருபகையாய்த்   தமிழினத்திற்(கு) இருக்குபகை    ஆரியம்             

    உணர்ந்துதமிழ்    இனமதுவே உள்ளமதில்   வைத்துமே                

ஒருமையுடன் தமிழினமே  ஒன்றிணைந்து   பகையினை            

     ஓட்டவேண்டும் தமிழ்நாட்டில்  உள்ளமொன்றி   நின்றுமே   

அருளன்பே  உலகமதில் ஆக்கமுறு மழையென              

    ஆர்த்துநின்று  பெய்வதனை  அனைவருமே  காணலாம்             

இருப்பவரும்  இல்லாரும்  வேற்றுமையைக்  களைவரே           

    இமயமென வாழ்வுநலம்  எழுச்சியுற்றுத்  திகழுமே  !

            புலவர் பழ.தமிழாளன்,

      இயக்குநர்-பைந்தமிழியக்கம்,

                 திருச்சிராப்பள்ளி.