தேராச் செய்வினை தீராத  இன்னல்  தரும் ! – பழ.தமிழாளன்

தக்கவர்க்கு வாக்களிப்பீர் தேராச் செய்வினை தீராத  இன்னல்  தரும் ! 1 சீரார்க்கும்   எண்ணமுடன்  திகழ்கதிராம்                எழுச்சிநிறை  உணர்வே  பெற்றுச்     செந்தமிழை  இனம்நாட்டை நெஞ்சகத்தே         வைப்பவரைத்  தேரல்   வேண்டும் ! தேராதே  கட்சியையும்  தேர்தலிலே  நிற்ப                          ரையுந்  தேர்ந்தெ  டுத்தால்       தீராத  இன்னலையே  இருகையால்         வணங்கியுமே  அழைத்தல்   ஒக்கும் ! கூரான வாளெடுத்துக் கூடியுள்ள தம்முயி                              ரைச்   செகுத்தல்  போல       குடியாட்சி  மாண்பழிக்கும்  கட்சிக்கே                வாக்கினையே  அளிப்போ  மாயின் ஏரார்த்த  தமிழ்மரபும் …

தன்னலம்  பெரிதா ? இனநலம்  பெரிதா ? – புலவர் பழ.தமிழாளன்

தன்னலம்  பெரிதா ? இனநலம்  பெரிதா ? 1. மனமொழியால் ஒன்றாது மதிமயங்கித்          தன்னலத்தால்  செயலே செய்வான்     மானமுமே  இல்லாத  மாக்களிலும்           கீழான  பிறவி  யாவான் தனதுநலம்  ஒன்றினையே  தலையாகக்      கொண்டேதான் வினையே செய்வான்    தன்னினத்துப் பகைவர்கால் தான்வீழுந்       தறுதலையன்  தமிழ  னல்லன் இனம்வாழ்ந்தால் இன்பமுடன் எல்லாரும்           வாழ்வாரென்  றெண்ண  மற்றே     இனப்பகையின்  பின்சென்றே  எடுபிடி           யாய்  இருப்பவனும்  இறந்தோ னாவான் இனப்பகையை  வீழ்த்துதற்கே  எவ்விழப்பு          வந்தாலும்  ஏற்று  வாழ்வோன்…

தமிழினப்   பகைவெல்ல   ஒன்றுக !-             புலவர் பழ.தமிழாளன்

தமிழினப்   பகைவெல்ல   ஒன்றுக! ஒருபகையாய்த்   தமிழினத்திற்(கு) இருக்குபகை    ஆரியம்                  உணர்ந்துதமிழ்    இனமதுவே உள்ளமதில்   வைத்துமே                 ஒருமையுடன் தமிழினமே  ஒன்றிணைந்து   பகையினை                  ஓட்டவேண்டும் தமிழ்நாட்டில்  உள்ளமொன்றி   நின்றுமே    அருளன்பே  உலகமதில் ஆக்கமுறு மழையென                   ஆர்த்துநின்று  பெய்வதனை  அனைவருமே  காணலாம்              இருப்பவரும்  இல்லாரும்  வேற்றுமையைக்  களைவரே                இமயமென வாழ்வுநலம்  எழுச்சியுற்றுத்  திகழுமே  !             புலவர் பழ.தமிழாளன்,       இயக்குநர்-பைந்தமிழியக்கம்,                  திருச்சிராப்பள்ளி.

மாவீரன்   பிரபாகரன்  மலர்ந்தொளிர்வர் ! – புலவர் பழ.தமிழாளன்

மாவீரன்   பிரபாகரன்  மலர்ந்தொளிர்வர் ! 1. ஈழமண்ணில்  தமிழ்நாடு மலர்ந்து மணம்   வீச    வீறுமிகு  பிரபாகர் தலைமைதனை   ஏற்று  வாழவினம் உயிர்கொடுத்தோர் வரலாற்றில்  நிற்பர் /      வையகத்தில்  தமிழ்வீரம்  வான்கதிரே  ஒக்கும் மாழவுமே  வைத்தரச  பச்சையென்பான் ஈழ     மண்ணைவிட்டே  மறைந்தொழிவான்  மனம்மகிழ  மக்கள் வாழவந்த  சிங்களத்தை  வசைகூறி   என்றும்     வையகமே  தூற்றிநிற்கும்  வன்கொலைஞர்  என்றே ! 2. கொலைகார  அரசபச்சே  கொற்றமுமே  ஏறின்     கொற்றவறம்  அன்னவனைக்  குப்புறவே  வீழ்த்தும் மலையொக்கும்  பண்பாட்டில்  மலர்ந்து  மணம்  வீசும்    …

கரையான் புற்றுக்குள் கருநாகம் – 2 : புலவர் பழ.தமிழாளன்

கரையான் புற்றுக்குள் கருநாகம் – 2 தில்லைமரம்  நிறைந்ததினால்  தில்லை      யென்ற பெயரோங்கும் இடமும் ஆகிச்   செந்தமிழர்  போற்றுகின்ற சிவனாகும்           நடராசர்  கோவி  லுக்குத் தொல்தமிழ  இனம்வந்த முதற்பராந்த        கமன்னென்பார்  பொன்னும்  வேய்ந்தார் /    புதுக்கோட்டை  மாமன்னர்  சேதுபதி           மரகதக்கல்  ஈந்து   மகிழ்ந்தார் // கொல்லைப்புற  வழியாக  உட்புகுந்த          தீச்சிதரும்  உரிமை  கோரல் /     கருநாகம்  கரையான்புற்  றுரிமை          தனைக்   கோருகின்ற  நிலையே ஒக்கும்  // வல்லடியாய்  வழக்காடு  தீச்சிதரை         …

கரையானின்   புற்றிற்குள்     கருநாகப்  படையெடுப்பா ! ? – புலவர் பழ.தமிழாளன்

கரையானின்   புற்றிற்குள்     கருநாகப்  படையெடுப்பா ! ? இறையுறையும்  கோவில்கட்ட   இயன்ற       வரை  பொருளீந்தோர்  தமிழ   ரன்றோ ?     எழிலார்க்கும் கோபுரமும் இறையமரும்           கருவறையும்  புறமும் உள்ளும் முறையாகப்  பணிபுரிந்தோர் முத்தமிழ்த்       தாய் ஈன்றெடுத்த  சேய்க ளன்றோ ?   முடிவுற்ற கோயிலினுள் முத்தாய்ப்பாய்          எப்பணியும்  செய்யா  நின்ற கறையுள்ளத் தீச்சிதர்கள்  உட்புகுந்தே       தில்லையிலே  போடும்  கொட்டம்    காணக்கண் கூசுகின்ற காட்சியதைக்          காணுங்கால்   கரையான்   தன்வாய் // உறைவதற்கே  உழைத்தெடுத்த  புற்றி         …

தமிழினத்து  நலவாழ்வை  எண்ணல்  வேண்டும்! –  புலவர் பழ.தமிழாளன்

தமிழினத்து நலவாழ்வை எண்ணல் வேண்டும்! இதழ்களுக்கு வேண்டும் ! 1.நாடாம்நம் மொழியினமே போற்றல் வேண்டும் !நற்றமிழர் பண்பாடு காத்தல் வேண்டும் !வாடாமல் உணவுண்டே மக்கள் வாழவழிவகைகள் ஆசான்போல் கூறல் வேண்டும் !நாடாளும் மன்னனிடம் குறையே கண்டால்நக்கீரன் போலுறுதி கூறல் வேண்டும் !ஏடாள்வோன் என்றென்றும் நெருப்பைக் கக்கும்எரிமலையாய்த் தீமைதனை எரித்தல் வேண்டும் ! 2.மனமொன்றித் தமிழினத்து மக்கள் எல்லாம்மாற்றமின்றித் தமிழறத்தைப் போற்றல் வேண்டும் !இனம்நாடு மொழிவாழ்ந்து சிறப்புற் றோங்கஎந்நாளும் ஏற்றபணி செய்தல் வேண்டும் !தனதுநல வாழ்வதனைப் புறத்தே தள்ளித்தமிழினத்து நலவாழ்வை எண்ணல் வேண்டும் !இனப்பகையாம் ஆரியத்தை…