தலைப்பு-தமிழுறுதி : thalaippu_thamizhuruthi

எண்ணுறும் போது தமிழையே  யெண்ணீர்
இசைத்துழி தமிழையே  யிசைப்பீர்
பண்ணுறும் போது தமிழ்ப்பணி தனையே
பழுதறப் பண்ணியின் புறுவீர்
உண்ணிடும் போதும் உறங்கிடும் போதும்
உயிருளந் துடித்திடும் போதும்
பண்ணினு மரிய தமிழையே  கருதிக்
காரிய வுறுதி கொண் டெழுவீர் !

கவியோகி சுத்தானந்த பாரதியார்