திருக்குறளை வாசிக்காவிடின் வாழ்வில் உயர்வேயில்லை!

 

ஈரடியில் உலகளந்த

திருக்குறளுக்கு ஈடில்லை

ஒரு குரலும் ஈரேழு உலகில்

 

ஆத்திச்சூடி கொன்றைவேந்தன்

கல்வெட்டுகள் ஓலைச்சுவடிகள்

அகழ்வாராய்ச்சியில் அகப்படுவதே ஆதாரங்கள்

 

மண்ணில் எழுத ஆரம்பித்து மரங்களில் இலைகளில்

பாறைகளில் பதிந்த தென்மொழி!

என் மொழி!

 

உணர்வுகளிலெல்லாம்

உறைந்திருக்கும்

உதிரத்தில் நிறைந்திருக்கும்

உயிரினில் கலந்திருக்கும்

 

இல்லாததேதுமில்லையதில்

சொல்லாதது யாதுமில்லை

செல்லாத ஊரூமில்லை

செவி சாய்க்கா யாருமில்லை

கல்லாத உயிருமில்லை

 

வாய்க்காத பேறுமில்லை

வாசிக்காது யாருமில்லை

நேசிக்காத உயிருமில்லை

வாசிக்காவிடின் வாழ்வில் உயர்வேயில்லை!

இவண்
ஆற்காடு க குமரன்
9789814114