labourer04

இரும்பைக்  காய்ச்சி உருக்கிடுவீரே !

இயந்திரங்கள்  வகுத்திடுவீரே !

கரும்பைச்  சாறு  பிழிந்திடுவீரே !

sugarcane-juicer01கடலில்  மூழ்கி  நன்முத்தெடுப்பீரே !

அரும்பும் வேர்வை உதிர்த்து புவிமேல்

ஆயிரம்  தொழில் செய்திடுவீரே  !

பெரும் புகழ்  நுமக்கே  இசைக்கின்றேன்

பிரமதேவன் கலை இங்கு  நீரே !!

 

மண்ணெடுத்து  குடங்கள்  செய்வீரே !potmaking01

மரத்தை வெட்டி  மனை  செய்குவீரே !

உண்ணக்  காய்கனி  தந்திடுவீரே !

உழுது  நன்செய்ப் பயிரிடுவீரே !

எண்ணெய்  பால்  நெய்  கொணர்ந்திடுவீரே !

இழையை  நூற்று  நல்லாடை  செய்வீரே !

விண்ணின்று  எமை  வானவர்  காப்பார்,

மேவிப்  பார்மிசைக்  காப்பவர்  நீரே !!

 

labourer08பாட்டும்  செய்யுளும்  கோத்திடுவீரே !

பரத  நாட்டியக்  கூத்திடுவீரே !

காட்டும்  வையப் பொருளின்  உண்மை

கண்டு  சாத்திரம்  சேர்த்துடுவீரே !

நாட்டிலே  அறம்  கூட்டி வைப்பீரே !

நாடும்  இன்பங்கள்  ஊட்டி வைப்பீரே !

தேட்டமின்றி  விழியெதிர்  காணும்

தெய்வமாக  விளங்குவீர்  நீரே !!

Portrait of Bharathi