தொழுகிறோம் உம்மை!

ஆலமரத்தின்

ஆணிவேர்

சலசலப்பின்றி

இலைகள்

இமயம் சரிந்து

இரு விழிகளில் நதியாய்

இதழினிலுதிரும்

இரங்கலும்

ஈரமாய்

நீர்…..தூரமாய்…..

கலங்கரை

விளக்கு

விளக்கியதில்

துலங்கிய கழகம்

கலங்கி

நூலகத்தில்

தவங்கிடக்கும்

நன்னூல்…..நின் முனை

என்னகத்தில்

பேராசிரியர்

பேராண்மை மிக்க

ஆசிரியர்

உம்மைக் கண்டு

ஆ……என

அண்ணாந்து வியந்த

சிறியர் யாம்

தொன்னூற்று எட்டு வரை

தொண்டு போதுமென

துயிலிலாழ்ந்தீரோ!

துணையினி யாரோ!

நேரில் காணாமலே

வேரில் நீர்

வேறில்லை என்னில்

ஈடில்லை மண்ணில்

பொதுச்செயலாளர்

பொதுவாகிப்போனீரோ

தொடர்ந்து தொண்டாற்ற

தொழுகிறோம் உம்மை!

துணையாய்,

தூணாய். எண்ணி…..

இவண்

ஆற்காடு.க.குமரன் 9789814114