இசை முரசு   ஒலித்தது  மார்கழி 11,  தி.பி. 1956  /  திசம்பர் 25,  கி.பி. 1925 :  ஓய்ந்தது பங்குனி 25, 2046 / ஏப்பிரல் 08, 2015

இசை முரசு ஒலித்தது மார்கழி 11, தி.பி. 1956 / திசம்பர் 25, கி.பி. 1925 : ஓய்ந்தது பங்குனி 25, 2046 / ஏப்பிரல் 08, 2015

 

நாகூர்  தேன்குரல் அனிபா (HONEYபா!) – (உ)ருத்ரா

“அழைக்கின்றார் அண்ணா”
என்ற கணீர் தேன்குரலில்
திராவிடக் கீதம்
யாழ் மீட்டிய‌
மா மனிதர் திரு நாகூர் அனிபா
மறைந்ததற்கு
நம் ஆழ்ந்த இரங்கல்கள்.
எத்தனைப்பாடல்கள்?
அந்தக் குரல் சுவடுகளுக்கு
இறைவனின் கையெழுத்தும்
போடப்பட்டிருக்கும் விந்தை உண்டு.
“இறைவனிடம் கையேந்துங்கள்” என்று
மக்கள் முன் உருகி வழிந்தார்.
காசுகள் குலுங்கும் ஒலிபோல‌
அந்த கைப்பறையின் ஒலியில்
ஆகாயமே குலுங்கி கீழே உதிர்ந்தது.
அனி{ ‘HONEY’)பா  அவர்களின் தேன்குரலில்
தமிழின் இன்பத்தேன் வந்து பாய்ந்ததை
இந்தத் தமிழ் மண் மறக்காது.

– (உ)ருத்ரா