தலைப்பு-நாக்கு,  பழநிபாரதி : thalaippu_nakku_pazhaniBharathi

நாக்கு
அசிங்கமானது
அபாயகரமானதும்கூட!

அது வாய்க்குள் முளைத்த கொம்பு
துருப்பிடித்த கத்தி
தீட்டப்பட்ட அரிவாளும்கூட!

சில நேரம்
தனது எச்சிலை
தன்மீதே துப்பிக்கொள்ளும்

இப்போது நாம்
இது குறித்துப் பேசுவோம்
இதுவே சரியான தருணம்

– பழநிபாரதி

பழநிபாரதி :pazhanibharathy