தலைப்பு-நாம்தமிழர்நாமே, சி.பா.ஆதித்தனார் ; thalaippu_naamthamizharnaame_chi-paa-athithanar

நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாமே!

 

(பல்லவி)

நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாமே

நாமே தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாமே

(சரணங்கள்)

சேர சோழ பாண்டியரின் வழிவந்தோர் நாமே

செந்தமிழைச் சங்கம்வைத்து வளர்த்தவர்கள் நாமே

பாரெல்லாம் புகழ்மணக்க வாழ்ந்தவர்கள் நாமே

பாங்குடனே திருக்குறளின் பாதை செல்வோர் நாமே

  (நாம் தமிழர்)

கப்பல் மீது கொடியைப்போட்டு கடல்களை கடந்து

கடாரத்தை சாவகத்தை வென்றவர்கள் நாமே

எப்பொழுதும் எவ்விடத்தும் உழைப்பவர்கள் நாமே

எல்லாரும் கூடிவாழ நாடிநிற்போர் நாமே

(நாம் தமிழர்)

இமயம் மீது முக்கொடியை ஏற்றியவர் நாமே

எதிர்த்தவரை புறந்தொடுக்க வைத்தவர்கள் நாமே

சமயவாழ்வில் சமரசத்தை கொண்டவர்கள் நாமே

தாழ்வுயர்வு பேசுவதைத் தவிர்ப்பவர்கள் நாமே

(நாம் தமிழர்)

முன்தோன்றி மூத்தகுடி முத்தமிழர் நாமே

முறையாக நுண்கலைகள் வளர்த்தவர்கள் நாமே

கண்போன்று உரிமைகளைக் காப்பவர்கள் நாமே

கலங்காமல் விலங்கொடித்து தலைநிமிர்வோம் நாமே

(நாம் தமிழர்)

– சி.பா.ஆதித்தனார்

அருகோபாலன் : aruko

தரவு: அரு.கோபாலன், ஆசிரியர், ‘எழுகதிர்’