நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாமே! – சி.பா.ஆதித்தனார்

நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாமே!   (பல்லவி) நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாமே நாமே தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாமே (சரணங்கள்) சேர சோழ பாண்டியரின் வழிவந்தோர் நாமே செந்தமிழைச் சங்கம்வைத்து வளர்த்தவர்கள் நாமே பாரெல்லாம் புகழ்மணக்க வாழ்ந்தவர்கள் நாமே பாங்குடனே திருக்குறளின் பாதை செல்வோர் நாமே   (நாம் தமிழர்) கப்பல் மீது கொடியைப்போட்டு கடல்களை கடந்து கடாரத்தை சாவகத்தை வென்றவர்கள் நாமே எப்பொழுதும் எவ்விடத்தும் உழைப்பவர்கள் நாமே எல்லாரும் கூடிவாழ…

தேர்தலில் ஆள்பவர்களையும் ஆண்டவர்களையும் புறக்கணிப்பீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தேர்தலில் ஆள்பவர்களையும் ஆண்டவர்களையும் புறக்கணிப்பீர்!     நிகழ இருக்கின்ற சட்டமன்றத்தேர்தலில்(2016)  பன்முனைப் போட்டிகள் உள்ளன. ஒவ்வோர் அணியும் நம்பிக்கையுடன் உள்ளதாகத்தான்  கருத்துகளை வெளிப்படுத்துகின்றன. இருப்பினும் தேர்தல்  நெருங்க நெருங்க இப்போதைய சூழலில் மாற்றம் ஏற்படும். எனவே, சிலர் நம்பிக்கைகள் பொய்த்துப்போகும். சிலர் எதிர்பார்த்ததைவிட வாக்குகள் கூடுதலாக வாங்கலாம். கூட்டணியாகப் போட்டியிடாத கட்சிகளும் தேர்தலுக்குப்பின் புதிய கூட்டணி அமைக்கலாம். எனினும் இன்றைய நம் கடமை, யாருக்கு நம் மதிப்பார்நத வாக்குகளை அளிக்க வேண்டும்  என ஆராய்ந்து வாக்குரிமையைப் பயன்படுத்துவதுதான். யார் வெற்றி பெற்றால் என்ன…

நாம் தமிழர், பிரான்சு – எழுச்சியுடன் கூடிய வித்திகை மங்கல நிகழ்வு

நாம் தமிழர்,  பிரான்சு – எழுச்சியுடன் கூடிய வித்திகை மங்கல நிகழ்வு   இணையம் வாயிலாக வாழ்த்துரை – செந்தமிழன் சீமான் எழுச்சியுரை – பேராசிரியர் கல்யாணசுந்தரம் (தமிழ்நாட்டில் இருந்து செல்கிறார்) நாள்: 06-03-2016 [இடம்: Gandhi 15 rue de la longueral 91270 vigneux sur seine] நேரம்: பிற்பகல் 15 மணி முதல் 19 மணி வரை (போக்குவரத்து:  தொடர்வண்டித் RER-D இறங்கும் இடம் VILLENEUV-SAINTGEORGES) தொடர்புக்கு: 0781753203, 0758559417  

தமிழை மறவாதிருக்க உறுதி ஏற்பிர்! விவரம் அனுப்புவீர்! – தமிழ்க்காப்புக்கழகம்

நாம் தமிழரெனில் உறுதி ஏற்போம்! பெயர் விவரம் வெளியிடப்பெறும். உலகத் தமிழன்பர்களே! தமிழின் வாழ்வே தமிழர் வாழ்வு. எனவே, தமிழ் இறவாதிருக்க நாம் தமிழை மறவாதிருக்க வேண்டும். நம் எண்ணமும் சொல்லும் செயலும் தமிழாகத் திகழ வேண்டும். தமிழர் உலகெங்கும் முதன்மையிடம் பெற வேண்டும் எனில் தமிழ் எங்கெங்கும் தலைமையிடம் பெற வேண்டும். அதற்கு உழைப்பதே நம் ஒவ்வொருவரின் கடமை. இதற்கு உடன்படுபவர்கள், பின்வரும் உறுதிமொழிகளை ஏற்க வேண்டுகிறோம்.   தமிழில் பிற மொழிச் சொற்களைக் கலந்து பேசவோ பிற மொழி எழுத்துகளைக் கலந்து…

இறையாண்மை என்றால் இதுதான் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

  இறையாண்மை என்னும் சொல்லிற்குக் காலந்தோறும் மாறுபட்ட பொருள் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் ஒரு குறிப்பிட்ட புவிப்பரப்பில் செலுத்தும் வகையில் அதிகாரம் முற்றிலும் உறைதல் (தங்குதல்) என்னும் அடிப்படைப் பொருளில் மாற்றம் மிகுதியாக இல்லை. இறையாண்மை என்பது அண்மையில் பெரிதும் பேசப்பட்டு வருவதால் நாம் இதனை அறிந்து கொள்ள வேண்டியது உள்ளது. தமிழர்க்கு இறையாண்மை மிக்க அமைப்பு தேவையா? அவ்வாறு பேசுவது சரியா? தவறா? தமிழக இறையாண்மை என்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானதா? என்பனவெல்லாம் நாம் அறிய வேண்டுவன ஆகும்.புவிப்பரப்பில் சட்டங்களையும் விதிகளையும்  ஆக்கவும்…