தலைப்பு-நட்பு - ஏ.எச்.யாசிர் அசனி -thalaippu_natpu

நியாயத்திற்கு நிழலாய் இருப்பதே நட்பு!

உதிர்க்கப்பட்ட சொற்களில், உதவி நீட்டுவதல்ல நட்பு,
சொற்கள் உதிருமுன், உதவிகரம் நீட்டுவதே நட்பு.

தீமைகளுக்குத் தீனியாய் இருப்பதல்ல நட்பு,
தீமைகளைத் தீயிட்டு அழிப்பதே நட்பு.

பொருள்தரா, இணைந்திருக்கும் இரட்டைக் கிளவியாய், இருப்பதல்ல நட்பு,
இணைந்தாலும், பிரிந்தாலும் பொருள்தரும், அடுக்குத்தொடராய் இருப்பது நட்பு.

கலவரங்களுக்குக், கருவாய் இருப்பதல்ல நட்பு,
அதனைக், கருவிலேயே கருக்கலைப்பு செய்வதே நட்பு.

அநீதிக்கு அடிக்கோடாய் இருப்பதல்ல நட்பு,
நியாயத்திற்கு நிழலாய் இருப்பதே நட்பு .

ஏ.எச்.யாசிர் அசனி, இலால்பேட்டை

அபுதாபி.

தொடர்புக்கு : 0556258851