துபாயில் சோபியாவின் கனலி நூல் வெளியீட்டு விழா

துபாயில்  சோபியாவின் கனலி நூல் வெளியீட்டு விழா துபாய் : துபாயில் பணிபுரிந்து வரும் திருமதி.  சோபியாவின் கவிதை நூல் தொகுப்பு ‘ கனலி’ ஆனி 15, 2048 /  29.06.2017 வியாழக்கிழமை மாலை துபாய் வசந்த பவன் உணவகத்தில் வெளியிடப்பட்டது. ஓசூரைச் சேர்ந்த இவர்  சார்சாவில் தமிழ்  ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். துபாய் அல்நாதா வசந்தபவனில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக காப்பியக்கோ.திரு சின்னா சர்ப்புதீன் கலந்து கொண்டார். அபுதாபியைச் சேர்ந்த எழுத்தாளர்  (இ)யூசுப்பு தலைமையேற்றார். திருமதி. செசிலாபானு, ஆசிப் மீரான் ,…

அபுதாபியில் நடைபெற்ற மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அபுதாபியில் நடைபெற்ற மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி     அபுதாபி அரோரா  நிகழ்வுகள் வளாகத்தில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு  நிகழ்ச்சி ‘ஆரோக்கியமென்ற செல்வம்’ என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை மார்பகப் புற்றுநோய்ச் சிறப்பு  வல்லுநர் மருத்துவர் ஆர்த்தி  சிராலி தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல  முதன்மை, அரிய தகவல்களை விவரித்தார். இதற்காக அவர் சிறப்புக் காணுரைக்காட்சி ஒன்றினையும் ஏற்பாடு செய்திருந்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தாய்மார்களின்…

நியாயத்திற்கு நிழலாய் இருப்பதே நட்பு! – ஏ.எச்.யாசிர் அசனி

நியாயத்திற்கு நிழலாய் இருப்பதே நட்பு! உதிர்க்கப்பட்ட சொற்களில், உதவி நீட்டுவதல்ல நட்பு, சொற்கள் உதிருமுன், உதவிகரம் நீட்டுவதே நட்பு. தீமைகளுக்குத் தீனியாய் இருப்பதல்ல நட்பு, தீமைகளைத் தீயிட்டு அழிப்பதே நட்பு. பொருள்தரா, இணைந்திருக்கும் இரட்டைக் கிளவியாய், இருப்பதல்ல நட்பு, இணைந்தாலும், பிரிந்தாலும் பொருள்தரும், அடுக்குத்தொடராய் இருப்பது நட்பு. கலவரங்களுக்குக், கருவாய் இருப்பதல்ல நட்பு, அதனைக், கருவிலேயே கருக்கலைப்பு செய்வதே நட்பு. அநீதிக்கு அடிக்கோடாய் இருப்பதல்ல நட்பு, நியாயத்திற்கு நிழலாய் இருப்பதே நட்பு . ஏ.எச்.யாசிர் அசனி, இலால்பேட்டை அபுதாபி. தொடர்புக்கு : 0556258851

அமீரகத்தில் கோடை விழாக்கள்

 அமீரகத்தில் கோடை விழாக்கள்    அபுதாபி : அமீரகத்தில் கோடை விழாவினையொட்டி அபுதாபி, துபாய் முதலான பல்வேறு பகுதிகளில் உள்ள வணிகவளாகங்களில் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் குழந்தைகள் பங்கேற்று தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்துவதை காணலாம். – முதுவை இதாயத்து