பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 1
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 5 தொடர்ச்சி)
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 1
அமுதவல்லி – உதாரன், இளவரசி கூண்டுக்கிளையப் பார்த்துப் பாடுகிறாள்
இசைப்பாடல்
அமுதவல்லி: யாப்பநூல்சொல்ல வந்தார்
கிளியே- என்றன்
காப்புடைத்துக் காவல் கொண்டார்
கிளியே கிளியே
வாய்ப்பான நேர மிங்கே
கிளியே- வீணில்
வதையாக மறையு தந்தோ
கிளியே கிளியே
விழிகுருடர் என்று சொன்னார்
கிளியே – எனக்கு
விழியிரண்டும் போத வில்லை
கிளியே கிளியே
பகையாகிக் கழியுங் காலம்
கிளியே – அவர்தாம்
பதைப்பாகி வந்தா ரில்லை
கிளியேகிளியே
(பின்புறமாக வந்து)
உதாரன் முத்தமிழுஞ் சொல்ல வந்தேன்
கிளியே – ஈங்கே
முத்தெடுக்க மூழ்கி விட்டேன்
கிளியே கிளியே
வித்தையினைப் பயிற்ற வந்தேன்
கிளியே – காதல்
வித்தையிலே தேர்ந்து விட்டேன்
கிளியே கிளியே
நிலவொளியைப் பாட வந்தேன்
கிளிளே- தங்க
நிலவைநான் பிடித்து விட்டேன்
கிளியே கிளியே
இலவங்காய் எனநி னைத்தேன்
கிளியே – கனிந்த
எலுமிச்சை பெற்று விட்டேன்
கிளியே கிளியே
திரையும் நடுவிருக்க
குருடெனும் பழியிருக்க
இணையும் நினைவிருக்க நெஞ்சத்திலே –காதல்
இல்லாமல் இருப்பதில்லையிப் பருவத்திலே
அமுதவல்லி: இணைத்து வைத்ததுவும் நிலவல்லவோ
நினைத்து அழைத்தவளும்நானல்லவோ
விழிகள் நாடுவதும்
நினைவு கூடுவதும்
கரங்கள் தேடுவதும்
நீயல்லவோ – காதல்
இளமையின் தேவைக் குணமல்லவோ
உதாரன்: வெல்லும் அரசும்
இன்றெமைக் கொல்லுமா – நம்
தேவைக்குச் சோலையிது போதுமா
அமுதவல்லி: உன்னை நாடிவரும்
என்னை அள்ளியிட
புன்னை மலருமிடம்
போதுமே- எந்த
மன்றமும் தனிமையின்
சுகந்தருமா ?
(தொடரும்)
புலவர் சா.பன்னீர்செல்வம், புதிய புரட்சிக்கவி
Leave a Reply