பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 6 – ஆ.வெ.முல்லை நிலவழகன்
(மார்கழி 20, 2045 / சனவரி 04, 2015 தொடர்ச்சி)
பாடு சிட்டே பாடு ! பண்பாடு !
காட்சி – 6
அங்கம் : ஆண் சிட்டு, பெண் சிட்டு
இடம் : குடில் முன் உள்ள மரக்கிளை
நிலைமை : (நாடகம் பற்றிய கருத்துரையில்
பேடும் சிட்டும் ஈடுபடல்)
ஆண் : நாடகம் எப்படி உள்ளது சொல்?
பேடே! நீயும் பெண் தானே!
பெண் : எனக்கென்னத் தெரியும்! நான் சொல்ல?
உனக்கெதும் தெரிந்தால் சொல்லிவிடு!
ஆண் : நடப்பிற்கும் நாடகக் காட்சிக்கும்
பிடிப்பே இல்லையாய்ப் பலரிங்கு
சுடுமொழி கொண்டே தமக்குள்ளே கடுமையாய்
உரைக்கின்றார்! பார்த்தாயா?
பெண் : கேட்டேன்! நானும்! இருந்தாலும்
போட்டேன்! உமக்கு புதிராக!
(வார்த்தையைப் பொரிக்கும் பேடங்கே
நேர்த்தியாய் உரையை முடித்ததனால்
சேர்த்து அணைக்க ஆண்சிட்டு
கோர்த்தே அணைத்தது பெண்சிட்டு)
பெண் : சரி! சரி! போதும்! விளையாட்டு
உரைக்கின்றார் கவிஞர்! ஏதோ! தான்!
(உரிமையில் கொஞ்சியே அடங்கியது
உற்றுக் கேட்கவும் எண்ணியது)
(காட்சி முடிவு)
(பாடும்)
Leave a Reply