paadu_chitteகாட்சி – 29

அங்கம்    :     ஆண்சிட்டு, பெண்சிட்டு

இடம்      :     மரக்கிளை

நிலைமை  :     (ஊடல் கூடல்)

(சிட்டுகள் சின்ன சிரிப்பாலே

சிறகால் அடித்து முகம் மலர்ந்து

மெட்டுகள் போட்டு கீச் சீச்

பண்பாடி ஆட்டம் போட்டுவிட)

(கவிஞரும் அன்பும் கண்டதனைக்

கண்களால் சிமிட்டிப் பேசியபின்

புவியைப் பார்த்து மேல் நோக்கி

புன்னகை வீசிய பொழுதினிலே)

 

(காட்சி முடிவு)

 –  தமிழ்மாமணி ஆ.வெ.முல்லை நிலவழகன்

aa.ve,mullainilavazhagan