தலைப்பு-பாராட்டு- அரவிந்தன் சுமைதாங்கி சாம்பசிவன் :thalaippu_paaraattu_aravinthan sambasivam

பாராட்டு

குறள் வெண்செந்துறை

பாராட்டை வேண்டாரும் உண்டோ உலகினில்

சீராட்டும் தாயையே வேண்டிடும் சேய்மை

மெச்சுதலைத் துச்சமாய் எண்ணினாலே நம்திறமை

உச்சத்தை எப்பொழுதும் காணாது காண்க

ஏற்பளிக்கும் போற்றுதலை நல்மனத்தில் நீவிதைத்தால்

நாற்றங்கால் நெல்மணியைத்

தந்திடுமே பார்!

நேர்மறையின் எண்ணமுடன்

தட்டிக் கொடுப்பதுவே

பார்போற்றும் பாராட்டாய்

நின்று பேசும்!

கலித்தாழிசை

மெச்சுதலும் முகத்துதியும்

சமமெனவே நினைப்பவரோ

தன்முனைப்பை ஆவணத்தைச்

சரிவரவே பிளந்தறியார்!

அரவிந்தன் சுமைதாங்கி சாம்பசிவம்