தமிழக வெற்றிக் கழகத்திற்குப் பாராட்டு – இலக்குவனார் திருவள்ளுவன்

  தமிழக வெற்றிக் கழகத்திற்குப் பாராட்டு நடிகர் விசய் அரசியலில் முழுமையாக ஈடுபட முடிவெடுத்துத் தனக்கான கட்சியைத் தொடங்கி  அறிவிப்பையும் வெளியிட்டார். அவர் தொடங்கியுள்ள கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாழ்த்தையும் “தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாழ்த்துகள்” என ‘அகரமுதல’ இதழுரை வாயிலாகத் தெரிவித்து இருந்தோம். அதில், “தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் வெற்றி, கழகம் ஆகிய சொற்கள் இடையே ஒற்று மிகுந்து வர வேண்டும். முதல் கோணல் முற்றும் கோணல் ஆகிவிடக்கூடாது. எனவே, தொடக்கத்திலேயே இதனைத் திருத்திப் பயன்படுத்த வேண்டுகிறோம்.  முகவரியைத்…

எழுத்தாளர் மு.முருகேசிற்கு மேனாள் ஆளுநர் கோபாலகிருட்டிண காந்தி பாராட்டு

எழுத்தாளர் மு.முருகேசிற்கு மேனாள் ஆளுநர் கோபாலகிருட்டிண காந்தி பாராட்டு காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அட்டோபர் 2 அன்று சென்னையில் சிறுவர்களுக்கான ‘அரும்பு நூலரங்கம்’ தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு எழுத்தாளர் ஆயிசா இரா.நடராசன் தலைமையேற்றார். க.நாகராசன் அனைவரையும் வரவேற்றார்.        இவ்விழாவில், சிறுவர் இலக்கியப் படைப்பிலக்கியங்களை கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிவரும் கவிஞர் மு.முருகேசின் பங்களிப்பைப் பாராட்டி, மேற்கு வங்க மாநில மேனாள் ஆளுநரும் காந்தியடிகளின் பேரனுமான கோபாலகிருட்டிண காந்தி பாராட்டும் நினைவுப் பரிசும் வழங்கிச் சிறப்பித்தார்.      வந்தவாசி நூலக…

ஒளவை அருளுக்குப் பாராட்டும் தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரமும்- இலக்குவனார் திருவள்ளுவன்

ஒளவை அருளுக்குப் பாராட்டும் தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரமும் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராக இருந்த முனைவர் ஒளவை அருள் நடராசன் தமிழ் வளர்ச்சி இயக்குநராகப் பணி அமர்த்தப்பட்டுப் பணிப் பொறுப்பேற்றுள்ளார். இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்.(திருவள்ளுவர், திருக்குறள் 517)  என்பதற்கிணங்க முதல்வர் தக்கவர்களைத் தக்கப்பொறுப்புகளில் அமர்த்தி வருகிறார். அவர் பணிப்பொறுப்பேற்றதுமே அவரது நியமனங்கள் இதை மெய்ப்பித்தன. அவற்றின் தொடர்ச்சியாக இந்நியமனமும் அதனை உணர்த்துகிறது. அந்த வகையில் தமிழ் வளர்ச்சி இயக்குநர் பதவிக்குப் பொருத்தமானவராக ஒளவை ந. அருள் திகழ்கிறார். சில…

‘மகளிர் சிறப்பு’ இதழின் வெள்ளி விழா ஆண்டிற்குக் குவிகத்தின் பாராட்டு

புரட்டாசி 10, 2052 / 26.09.2021 ஞாயிறு மாலை 6.30 ‘மகளிர் சிறப்பு’ இதழின் வெள்ளி விழா ஆண்டிற்குப் பாராட்டு நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.   நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்க விரும்புகிறோம்      நிகழ்வில் இணைய  கூட்ட எண்  Zoom  Meeting ID: 6191579931 கடவுச்சொல்  passcode kuvikam123 அல்லது இணைப்பு    https://bit.ly/3wgJCibyoutube இணைப்புhttps://bit.ly/3v2Lb38

மாணிக்கவாசகம் பள்ளி : அறிவியல் இயக்கப் போட்டிகளில் பங்கேற்றவர்களுக்குப் பாராட்டு

தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில்  தமிழ்நாடு அறிவியல் இயக்கப் போட்டிகளில் பங்கு பெற்றுச் சான்றிதழ்கள் பதக்கங்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.  நிகழ்விற்கு வந்தவர்களை மாணவர் நந்தகுமார் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆசிரியர்நாள் கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்றுச் சான்றிதழ், பதக்கம் தனலெட்சுமி, இரஞ்சித்து, உமா மகேசுவரி , சீவா, பரமேசுவரி, பார்கவி இலலிதா, இராசேசுவரி, நித்திய கல்யாணி, காயத்திரி ஆகிய மாணவர்களுக்கும், இரோசிமா…

மாணிக்கவாசகம் பள்ளியில், ஓவியப்போட்டியில் வென்றவர்களுக்கும் பங்கேற்றோருக்கும் பாராட்டு

மாணிக்கவாசகம் பள்ளியில், ஓவியப்போட்டியில்  வென்றவர்களுக்கும் பங்கேற்றோருக்கும் பாராட்டு தேவகோட்டை,  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில்  வாணாள் காப்பீட்டுக் கழகம் சார்பாக நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று முதலிடம் பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.  விழாவிற்கு வந்தவர்களைப் பள்ளி மாணவர்  இராசேசு வரவேற்றார். பள்ளித்தலைமை ஆசிரியர்  இலெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.  வாணாள் காப்பீட்டுக்கழகம்(எல்.ஐ.சி.) சார்பாக நடைபெற்ற ஓவிய போட்டிகளில் பங்கு பெற்று முதலிடம் பிடித்த 3 ஆம் வகுப்பு மாணவர் பாலமுருகன்,  மற்றும் 4 ஆம் வகுப்பு மாணவர் கிசோர்குமார்…

மாணிக்கவாசகம் பள்ளியில்விருது பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு விழா

 மாணிக்கவாசகம் பள்ளியில் விருது பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு விழா    தேவகோட்டை – தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் விருது பெற்ற பள்ளி மாணவிகளுக்குப் பாராட்டு  விழா நடைபெற்றது.    நிகழ்வுக்கு வந்தவர்களை மாணவர் செகதீசு வரவேற்றார்.   பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.   தேவகோட்டை த.மு.எ.ச.கலை இலக்கிய இரவு விழாவில் மாநில அளவில் பரிசுகளை வென்ற இப்பள்ளி மாணவிகள் தனலெட்சுமி, பரமேசுவரி, காவியா ஆகியோருக்கு விருதுகளும், புத்தகங்களும் பரிசாக வழங்கப்பட்டன.  …

பாராட்டு – அரவிந்தன் சுமைதாங்கி சாம்பசிவம்

பாராட்டு குறள் வெண்செந்துறை பாராட்டை வேண்டாரும் உண்டோ உலகினில் சீராட்டும் தாயையே வேண்டிடும் சேய்மை மெச்சுதலைத் துச்சமாய் எண்ணினாலே நம்திறமை உச்சத்தை எப்பொழுதும் காணாது காண்க ஏற்பளிக்கும் போற்றுதலை நல்மனத்தில் நீவிதைத்தால் நாற்றங்கால் நெல்மணியைத் தந்திடுமே பார்! நேர்மறையின் எண்ணமுடன் தட்டிக் கொடுப்பதுவே பார்போற்றும் பாராட்டாய் நின்று பேசும்! கலித்தாழிசை மெச்சுதலும் முகத்துதியும் சமமெனவே நினைப்பவரோ தன்முனைப்பை ஆவணத்தைச் சரிவரவே பிளந்தறியார்! அரவிந்தன் சுமைதாங்கி சாம்பசிவம்

நல்வாழ்வுத்திட்டச் செயற்பாட்டில் தமிழகம் முன்னோடி – தெலங்கானா குழு பாராட்டு

நலவாழ்வுத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்றும், முதலமைச்சர் செல்வி  செயலலிதா நிறைவேற்றி வரும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், அம்மா குழந்தைகள் நலப் பரிசுப்பெட்டகம், மகப்பேறு உதவித் திட்டம்  முதலான  நல்வாழ்வுத் திட்டங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது என்றும் தெலங்கானா மாநில  நலவாழ்வுத்துறை அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநில  நலவாழ்வுத்துறை அமைச்சர்  மரு. கே. லட்சுமி தலைமையிலான 18 பேர் அடங்கிய குழுவினர்,  (26.02.16 அன்று) சென்னை வந்தனர். ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை…

மாணிக்கவாசகம் பள்ளி மாணாக்கர்க்குப் பாராட்டு

  அறநூல் ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற தேவகோட்டை பெருந்தலைவைர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ,மாணவியர்க்குப் பாராட்டு விழா   தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாகப் போட்டி போட்டு அறநூல் ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு உதவி பெறும் பள்ளி மாணவ,மாணவியர்க்குப் பாராட்டு விழா நடைபெற்றது. பாராட்டு விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியை கலாவல்லி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.   காரைக்குடி   தமிழ்ச் சங்கம் சார்பாக நடைபெற்ற அறநூல் ஒப்புவித்தல் பள்ளிப் பரிசு போட்டிகளில்…

பரிசுபெற்ற மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணாக்கர்க்குப் பாராட்டு!

பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி அரசு உதவி பெறும் மாணவர் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு வெற்றி பெற்றதற்குப் பாராட்டு   ஈகியர்(தியாகிகள்) நாள்விழா : கே.எம்.எசு..கல்வி அறக்கட்டளை சார்பில் நடுநிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர் வி.வசந்த குமார் முதல் பரிசை வென்றார்.   இதே பள்ளியின் மாணவர் கண்ணதாசன், மாணவி தனம் ஆகியோர் சிறப்புப் பரிசுகள் பெற்றனர்.   பொற்கிழிக்கவிஞர் அரு.சோமசுந்தரன், குன்றக்குடி மடத்தின் ஆதீனப்புலவர் பரமகுரு…