புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.16-20
(இராவண காவியம்: 2. தமிழகப் படலம், 11-15 தொடர்ச்சி)
இராவண காவியம்
1. தமிழகக் காண்டம்
2. தமிழகப் படலம்
தென்பாலி
16 இடைநில மைந்துநா றெண்ணரு கல்லிற்
படவொளி மேய பவளமு முத்தும்
கொடுகுட நாட்டுக் கொழும்பொரு ளோடு
கடல்வளங் கண்டு களித்ததந் (நாடே,
பெருவளம் தென்பாலி
17.குணகரை குன்றங் குறும்பனை யோடு
மணமிகு தெங்க மதுரைமுன் பாலை
இணருபின் பாலையோ டேழ்தலை மேய
உணவமல் நாற்பதோ டொன் பது நாடே.
18.கொல்லம் தோடு குமரி முதலா
மல்லன் மிகும்பன் மலைவள நாடும்
எல்லியல் பாகவே ழேழொடு குன்றா
நல்லியல் பாகவந் நாடு பொலிந்த.
வேறு
19.பருவளக்குமரி யோடு பஃறுளியாறு வீறுகொடு பாய்தலான்
பெருவளத்தின தாற்பெ ருவள நாடெனும்பெயர் பெற்றதால்;
குருவளக்குமரி பாய்த லாற்குமரி நாடெ னும்பெயர் கூறுமால்;
மருவளத்ததென் பாலி ருத்தலான் வழங்கு மஃதுதென் பாலியே.
வேறு
20.தன்னிகராந் தமிழ்வளர்க்கத் தலைச்சங்கந் தனைநிறுவி
மன்னுபெரும் புகழ்பூத்த மழைவளக்கைப் பாண்டியர் தந்
துன்னுமுயர் பதியான தொன்மதுரை யெனுநகரைத்
தன்னுடைய தலைநகராத் தான் கொண்ட தந்நாடே..
தொடரும்
இராவண காவியம்
புலவர் குழந்தை
+++
- இணரிதல் – நெருங்குதல். அமலு தல்-பெருத்தல்.
ஏழ் தலைமேய் – ஏழ்என் னும் எண் ணை முதலிலு
டைய், ஏழ்குணகரை நாடு, ஏழ்குன்றநாடு. ஏழ்
குறும்பனை நாடு, ஏழ்தெங்க நாடு, ஏழ்மதுரைநாடு,
ஏழ்முன்பாலை நாடு, ஏழுபின்பலைநாடு எனக்
கொள்க.
18, கொல்லம், குமரி முதலிய மலைநாடுகள். எல்-
பெருமை, நல் இயல்பு ஆகி-நல்ல வளம்
பொருந்த. அ நாடு-பெருவளமும் தென் பாலியும்.
+++
Leave a Reply