புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.26-30
(இராவண காவியம்: 2. தமிழகப் படலம், 21-25 தொடர்ச்சி)
1. தமிழகக் காண்டம்
2. தமிழகப் படலம்
கிழக்கு நாடு
26. மஞ்சுதவழ் தருமேற்கு மலைத்தொடர்கீழ்ப் படமேற்கில்
விஞ்சுபுகழ்ப் பெருஞ்சேர வேந்தரிருந் தினிதாண்ட
வஞ்சியெனப் பெயர்பூண்ட மலிவளத்த திருநகரைக்
கொஞ்சுதலை ஈகராகக் கொண்டதுவா லிதன்கீழ்பால்.
கிழக்கு நாடு
27. சிங்களஞ்சா வகமுதலாந் தீவுகளும் திரையோவா
வங்கவிருங் கடற்பரப்பும் மரஞ்செறிகான் மலையருகச்
செங்கரும்புஞ் செந்நெல்லுஞ் செருக்கொடுவான் றொடவிகலும்
பொங்குவள வயல்மருதம் புனைநாடாப் பொலிந்ததுவே.
28. அம்மருத வளநாட்டி னணிநாகை யெனுநகரில்
மும்மதிலின் கோயிலிடை முறைதிறம்பா வகையிருந்து
செம்மையுடன் தமிழர்களைத் திசைமணக்குந் தமிழ்ச்சோழர்
தம்முயிரின் காப்பேபோற் றனிக்காத்து வந்தனரே.
29.அந்நாடு கிழக்கிருந்த தாற்கிழக்கு நாடெனவும்
முன்னோடு மருதவள முதன்மைகொடிந் திரமெனவும்
தென்னாடுந் திருநாடும் செவிகேட்கும் புகழ்வாய்ப்ப
எந்நாடு அணையில்லே மெனவேங்க விலங்கினதே.
30.அக்கிழக்கு நாட்டொடுநல் லணிகிளர்தென் பாலியும்பொன்
தொக்கிருக்கும் பெருவளமுந் தொலைவறியாத் திராவிடமும்
மக்களுக்கும் புட்களுக்கு மாக்களுக்கும் வேண்டுவன
புக்கிருக்கும் தமிழகமாப் பொருவிலவாப் பொலிந்தனவே.
Leave a Reply