புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.36-40

(இராவண காவியம்: 1.2.31-35 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம்  2. தமிழகப் படலம் குறிஞ்சி 36. அடுப்பிடு சாந்தமோ டகிலின் நாற்றமும் துடுப்பிடு மைவனச் சோற்றி னாற்றமும் மடுப்படு காந்தளின் மணமுந் தோய்தலாற் கடைப்படு பொருளெலாங் கமழுங் குன்றமே. 37. தண்டமி ழகமெனுந் தாயின் மங்கலங் கொண்டணி விழவயர் குறிச்சி முன்றிலிற் றொண்டக முழங்கிடத் தோலின் யாக்கையர் கண்டெனு மொழிச்சியர் களிப்ப வாடுவர். 38. சந்தன முன்றிலிற் றங்கை பாவையை மந்திகை செய்துள மகிழச் செய்யுமால்; குந்தியே கடுவனுங் குழந்தை முன்மட…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.31-35

(இராவண காவியம்: 1.2.26-30 தொடர்ச்சி) 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் ஐந்நிலம் – குறிஞ்சி வேறு 31.இவ்வகை நான்குட னியன்று பல்வளந் துவ்விய தமிழகத் துணிந்த மேலவர் செவ்விய முறையினிற் சென்ற வைந்நிலக் குவ்வையின் முதலிய குறிஞ்சி காணுவாம். 32.இடிகுரல் யானைதன் னிளைய வின்னுயிர்ப் பிடிபசி களைந்திடப் பெரிய யாக்கிளை முடியது படியுற முறிக்கு மோசையாற் படிசிறு கிளியினம் பறந்து செல்லுமால். 33.அருவிய முருகிய மார்ப்பப் பைங்கிளி பருகிய தமிழிசை பாடப் பொன்மயில் அருகிய சிறைவிரித் தாடப் பூஞ்சினை மருவிய குரக்கினம்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.26-30

(இராவண காவியம்: 2. தமிழகப் படலம், 21-25 தொடர்ச்சி) 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் கிழக்கு நாடு   26. மஞ்சுதவழ் தருமேற்கு மலைத்தொடர்கீழ்ப் படமேற்கில் விஞ்சுபுகழ்ப் பெருஞ்சேர வேந்தரிருந் தினிதாண்ட வஞ்சியெனப் பெயர்பூண்ட மலிவளத்த திருநகரைக் கொஞ்சுதலை ஈகராகக் கொண்டதுவா லிதன்கீழ்பால். கிழக்கு நாடு 27. சிங்களஞ்சா வகமுதலாந் தீவுகளும் திரையோவா வங்கவிருங் கடற்பரப்பும் மரஞ்செறிகான் மலையருகச் செங்கரும்புஞ் செந்நெல்லுஞ் செருக்கொடுவான் றொடவிகலும் பொங்குவள வயல்மருதம் புனைநாடாப் பொலிந்ததுவே. 28. அம்மருத வளநாட்டி னணிநாகை யெனுநகரில் மும்மதிலின் கோயிலிடை முறைதிறம்பா…